ரூ.526 கோடி மதிப்பிலான ரபேல் விமானத்தை ரூ.1670 கோடிக்கு ஏன் வாங்க வேண்டும்?: ராகுல் காந்தி

பிரான்சிடம் இருந்து வாங்கப்பட்டுள்ள ரபேல் போர் விமானங்களில் முதல் கட்டமாக 5 விமானங்கள் நேற்று இந்தியா வந்தடைந்தன.
ரபேல் விமானங்கள் இந்திய விமானப்படையில் இணைக்கப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், அக்கட்சியின் எம்.பி.யுமான ராகுல் காந்தி வாழ்த்து தெரிவித்துள்ளார். அத்துடன், மத்திய அரசையும் சாடியுள்ளார்.

இதுதொடர்பாக, ராகுல் காந்தி வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் சில கேள்விகளை எழுப்பியுள்ளார். 526 கோடி ரூபாய் மதிப்புள்ள ரபேல் விமானத்தை ஏன் 1670 கோடி ரூபாய்க்கு வாங்க வேண்டும்?

126 விமானங்களுக்குப் பதிலாக 36 விமானங்கள் வாங்கியது ஏன்? இந்துஸ்தான் ஏரோனாடிகல் நிறுவனத்திற்கு பதிலாக திவாலாகிப் போன அனில் அம்பானி நிறுவனத்திற்கு 30 ஆயிரம் கோடி மதிப்பிலான ஒப்பந்தங்களை வழங்கியது ஏன்? இந்த கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் அளிக்க முடியுமா? என பதிவிட்டுள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply