கிழக்கு ஆஸ்பத்திரிகளுக்கு பொலிஸ் – அதிரடிப்படை விசேட பாதுகாப்பு
கிழக்கு மாகாணத்தில் கடமையாற்றும் வெளிமாவட்டங்களைச் சேர்ந்த டாக்டர்கள், தொழிலாளர்கள், மருந்தகர்களின் பாதுகாப்புக்கென சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆனந்த விஜேசிங்க தலைமையிலான விசேட குழு வொன்றை பாதுகாப்பு அமைச்சு ஏற்பாடு செய்துள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபய ராஜபக்ஷ, பொலிஸ் மா அதிபர் ஜயந்த விக்கிரமரட்ண, கிழக்கு மாகாண முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் ஆகியோருக்கிடையேயான விசேட கூட்டத்தில் இப்பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து முடிவெடுக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ரஞ்சித் குணசேக்கர தெரிவித்தார்.
டாக்டர்கள், தொழிலாளர்கள், மருந்தகர்கள், மாணவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளவென சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஆனந்த விஜேசிங்க புறப்பட்டுச் சென்றுள்ளார்.
கிழக்கில் நிலைகொண்டுள்ள விசேட அதிரடிப்படையினருடன் இணைந்து பொலிஸார் பாதுகாப்பு வலையமைப்பொன்றை ஏற்படுத்தவுள்ளனர்.
இதேவேளை, நேற்று கிழக்கில் சகல அரசாங்க ஆஸ்பத்திரிகள், மாகாண சபைக்கு கீழ் இயங்கும் வைத்தியசாலைகளுக்கு மேலதிகமாக ஆயுதம்தரித்த பொலிஸார் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
கிழக்கு மாகாண நிர்வாகத்தை சீர்குலைப்பதற்காக பயங்கரவாதிகள் மேற்கொள்ளும் இவ்வாறான செயல்களைக் கண்டு அஞ்சவேண்டாம் என்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் என்ற வகையில் டாக்டர்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்குவதாகவும் அனைவரும் கடமைக்கு திரும்புமாறும் முதலமைச்சர் சந்திரகாந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார். டாக்டர்கள், மாணவர்கள், தொழிலாளர்கள், மருந்தகர்கள் வெளியேறிச் செல்வது பயங்கரவாதிகளின் செயல்களுக்கு ஏதுவாக அமைந்துவிடும். எனவே அனைவரும் கடமைக்கு திரும்ப வேண்டும் எனவும் முதலமைச்சர் சந்திரகாந்தன் வேண்டு கோள்விடுத்துள்ளார்.
வவுணதீவு டாக்டர் படுகொலை சம்பவத்தைத் தொடர்ந்து மட்டக்களப்பிலிருந்து 42 சிங்கள டாக்டர்கள் வெளியேறிச் சென்றுள்ளனர்.
இதேபோன்று நேற்று அம்பாறை மாவட்டத்தில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பதில் பிரதிப் பணிப்பாளர் டாக்டர் எம்.எம்.எஸ். ஜெலீலுல் இலாஹி கூற்றுப்படி பிராந்தியத்திலிருந்து 11 டாக்டர்கள் வெளியேறிச் சென்றுள்ளனர்.
கல்முனை அஷ்ரஃப் ஆதார வைத்திய சாலையிலிருந்து ஒரு சிறுவர் வைத்திய நிபுணர் உட்பட 10 டாக்டர்களும், கல்முனையிலிருந்து 10 டாக்டர்களும் வெளியேறிச் சென்றுள்ளனர். எனினும், நேற்று கல்முனை பிராந்திய ஆஸ்பத்திரிகளுக்கும் மேலதிக பொலிஸார் பாதுகாப்புக்காக கடமையிலீடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply