யாழ்- கொழும்பு பயணத்திற்கு 5 பஸ்கள் தயார் நிலையில்
யாழ்ப்பாணத்திற்கும் கொழும்பிற்கும் இடையில் ஏ9 தரைவழிப் பாதையூடான போக்குவரத்திற்காக 5 பஸ்கள் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பஷில் ராஜபக்ஷவினால் வழங்கப்பட்டுள்ளன. வடக்கின் வசந்தம் வேலைத் திட்டத்தில் வடபிராந்திய போக்குவரத்து சபையின் பயன்பாட்டுக்கு 5 பஸ்வண்டிகள் வழங்கப்பட்டதுடன் தரைவழி போக்குவரத்து ஆரம்பிப்பதற்கு ஏற்ற வகையில் தயார் நிலையில் இந்த பஸ்கள் இருக்க வேண்டுமென அறிவுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
பாதுகாப்பு படையினரின் ஒத்துழைப்புடன் மக்கள் போக்குவரத்து அடுத்த வார காலப்பகுதியில் ஆரம்பிக்கப்படலாம் என தெரிவிக்கப்படுகிறது. வடக்கின் வசந்தம் திட்டத்தில் வட பிராந்திய போக்குவரத்திற்கு 4.3 மில்லியன் ரூபா பெறுமதியான பஸ் உபகரணங்களும் இன்று மாலை மயிலிட்டி உயர்பாதுகாப்பு வலயப் பகுதியில் வைத்து பஷில் ராஜபக்ஷ எம்.பி.யினால் வழங்கப்பட்டது. இதேவேளை, இன்று வழங்கப்பட்ட உபகரண தொகுதிகள் மூலம் யாழ். மாவட்டத்தில் சேவையில் ஈடுபடுவதற்கு உடனடியாக 10 பஸ் வண்டிகள் தயாராக உள்ளதுடன் அனைத்து பகுதிகளுக்கும் 86 பஸ் வண்டிகள் சேவையில் ஈடுபடவுள்ளதாக போக்குவரத்து அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply