நிவாரணக் கிராமங்களில் சிறு சிறு குறைபாடுகள் இருப்பினும் சிறப்பான முறையிலேயே உள்ளன: சிவநாதன் கிஷோர்
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்துள்ள மக்கள் தங்கவைக்கப் பட்டுள்ள நிவாரணக் கிராமங்களில் சிறு சிறு குறைபாடுகள் இருப்பினும் சிறப்பான முறையிலேயே உள்ளன என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம். பி. சிவநாதன் கிஷோர் தெரிவித்தார்.தமிழ்த் தேசிய கூட்டமைப்பு எம். பி. சிவநாதன் கிஷோர் நேற்று தனது துணை வியார் சகிதம் செட் டிக்குளம் நிவாரணக் கிராமங்களுக்கு விஜயம் செய்தார். சகல நலன்புரி நிலையங்களுக்கும் இவர் விஜயம் செய்து நிலைமைகளை அவதானித்தார்.
அத்துடன் செட்டிக்குளம் மாவட்ட அரசினர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நோயாளர்களையும் இவர் பார்வையிட்டார்.மக்கள் தங்கவைக்கப்பட்டுள்ள 4ஆவது வலயப் பகுதிக்கு சென்ற கிஷோர் எம்.பி. தண்ணீர் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்தார். உடனடியாக தண்ணீர் தட்டுப்பாட்டை நீக்குவதற்காக நடவடிக்கைகளை எடுத்துவருவதை அவர் நேரில் அவதானித்ததாகவும் தெரிவித்தார்.குறிப்பாக ஒரு நிவாரணக் கிராமத்திலுள்ளவர்கள், மற்றைய நிவாரணக் கிராமத்திலுள்ள தமது உறவினர்களை சந்திக்க ஆவலாய் உள்ளதாகவும் மக்கள் தன்னிடம் தெரிவித்ததாகவும் கிஷோர் எம். பி. தெரிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply