புலிகளின் மகளிர் பிரிவு தலைவி தமிழினி நீதிமன்றில் ஆஜர்

தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்தின் மகளிர் பிரிவுத் தலைவியாக செயற்பட்டு வந்தவரென சந்தேகிக்கப்படும் தமிழினி என்றழைக்கப்படும் சுப்பிரமணியம் சிவகாசி இன்று வியாழக்கிழமை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். சந்தேகநபரான தமிழினி, வவுனியா அகதி முகாமில் வைத்து படையினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விசாரணை நடவடிக்கைகளுக்கென தம்மிடம் ஒப்படைக்கப்பட்டதாக குற்றப்புலனாய்வு திணைக்களம் நீதிமன்றுக்கு அறிவித்தது.

குறித்த சந்தேகநபர் கடந்த 1991ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தில் இணைந்து கொண்டவரெனவும் பின்னர் 1993ஆம் ஆண்டில் பூநகரி இராணுவ முகாம் மீது புலிகளால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் நடவடிக்கைகளோடு நெருங்கிய தொடர்புடையவர் என்பது குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் குற்றப்புலனாவுப் பிரிவினர் அறிவித்தனர். அத்துடன், மேற்படி சந்தேகநபர் தடுப்புக்காவல் உத்தரவின் பேரில் மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாகவும் மன்றுக்கு அறிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply