கெப்டன் அலி கப்பலில் உள்ள உதவிப் பொருட்களை இலங்கையில் இறக்க இந்தியா உதவ வேண்டும்: கலைஞர் கருணாநிதி

கெப்டன் அலி கப்பலில் உள்ள உதவிப் பொருட்களை இலங்கையில் இறக்க அந்த நாட்டை இந்தியா இணங்கச் செய்ய வேண்டும். மேலும் செஞ்சிலுவைச் சங்கம் போன்ற சர்வதேச அமைப்புக்களின் கண்காணிப்பில் அந்தப் பொருட்கள் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களுக்கு கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று தமிழக முதல்வர் கலைஞர் கருணாநிதி கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் அவர் மத்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம். கிருஷ்ணாவுக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பி வைத்துள்ளார்.

அந்த கடிதத்தின் விபரம் வருமாறு:

இலங்கையில் உணவு கிடைக்காமல் தவித்த தமிழ் மக்களுக்கு உதவ ஐரோப்பிய நாடுகளில் வாழும் தமிழர்கள் அனுப்பி வைத்த உதவிப் பொருட்கள் கொண்ட கெப்டன் அலி கப்பலை இலங்கை கடற்படை திருப்பி விட்டது.

அந்த கப்பலில் 884 தொன் உணவு, மருந்து மற்றும் உதவிப் பொருட்கள் இருப்பதாக கூறப்படுகிறது. உலகில் புலம்பெயர்ந்து தவிப்பவர்களுக்கு உதவ மனிதாபிமான அடிப்படையில் தேவையான பொருட்களை சர்வதேச சமூகம் கொடுப்பது வழக்கமான ஒன்றுதான். எனவே, இந்த நேரத்தில் இது தொடர்பாக இந்திய அரசு தலையிடுவது பொருத்தமானதாக, சரியான நேரத்தில் உதவுவதாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.

கெப்டன் அலி கப்பலில் உள்ள உதவிப் பொருட்களை இலங்கையில் இறக்க அந்த நாட்டை இந்தியா சம்மதிக்க வைக்க வேண்டும். மேலும் செஞ்சிலுவை சங்கம் போன்ற சர்வதேச அமைப்புகள் கண்காணிப்பில் அந்த உதவிப் பொருட்களை இலங்கை  மக்களுக்கு கிடைக்க பரிந்துரை செய்ய வேண்டும்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply