‘வடக்கின் வசந்தம்’ திட்டத்தை துரிதமாக்க மன்னாரில் 3வது கூட்டம்
வடக்கின் வசந்தம்’ திட்டத்தை துரிதமாக முன்னெடுப்பதற்காக எற்படுத்தப் பட்ட வடமாகாண அபிவிருத்திக்கான விசேட செயலணியின் மூன்றாவது மாவட்டக் கூட்டம் இன்று மன்னாரில் நடைபெறுகிறது. செயலணியின் தலைவரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பசில் ராஜபக்ஷ எம். பியின் தலைமையில் கூட்டம் இன்று காலை நடைபெறுகிறது.
மன்னார் மாவட்ட அரச அதிபர் நிக்கலஸ்பிள்ளை உட்பட மன்னார் மாவட்டத்தில் உள்ள பிரதேச செயலகத்தின் பிரதிநிதிகள், பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
மீள்குடியேற்ற அனர்த்த நிவாரண சேவைகள் அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அமைச்சின் செயலாளர்கள், கல்வி, சுகாதாரம், மீன்பிடி, மின்சாரம், போக்குவரத்து, வீதி அபிவிருத்தி, தொலைதொடர்பு துறைசார்ந்த பலரும் கலந்துகொள்ளவுள்ளனர்.
மன்னார் மாவட்டத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ள மீள்குடியேற்றத்தின் மூன்றாம் கட்டம் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்படவுள்ளதுடன் தள்ளாடி பாலம் நிர்மாணப் பணிகள், ஏ-32 பாதை புனரமைப்பு, அருவி ஆற்றுப் பாலம் கட்டுமானப் பணிகள், கட்டுக்கரைக்குளம் புனரமைப்பு உள்ளிட்ட முக்கிய விடயங்களும் இங்கு விரிவாக கலந்துரையாடப்படவுள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply