முல்லைத்தீவு மாவட்டத்தில் 554 கி.மீ.வீதி அபிவிருத்தி ‘வடக்கின் வசந்தம்’ திட்டத்தில் துரித நடவடிக்கை

முல்லைத்தீவு மாவட்டத்தில் வீதி அபிவிருத்தி அதிகார சபையினாலும், வீதி அபிவிருத்தி திணைக்களத்தினாலும் பராமரிக்கப்படும் வீதிகள் அனைத்தும் 16866 மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன. இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்படும் இந்த அபிவிருத்தி நடவடிக்கையில் 180 நாள் அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 156 மில்லியன் ரூபாவும், மூன்று வருட அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் 16710 மில்லியன் ரூபாவும் செலவிடப்படவுள்ளன. மொத்தம் 554 கிலோ மீட்டர் வீதி இரண்டு கட்டங்களிலும் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.

வடக்கின் வசந்தம் செயற் திட்டத்தின் கீழ் முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படவுள்ள அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பாக வடக்கு அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் தலைவரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகருமான பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ தலைமையில் நேற்று முன்தினம் நடைபெற்ற கூட்டத்தில் இத்தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏனைய பிரதான தீர்மானங்களாவன 2006ம் ஆண்டளவில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வீடுகளில் ஒரு வீதத்திற்கு மாத்திரம் மின்சார வசதி இருந்தது.

180 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் இதை 15 வீதமாக அதிகரிப்பதற்கும், மூன்று வருட வேலைத் திட்டத்தின் கீழ் எல்லா வீடுகளுக்கும் மின்சாரம் வழங்கவும் தீர்மானிக்கப்பட்டிருக்கிறது. 2200 மில்லியன் ரூபா செலவில் மேற்கொள்ளப்படவிருக்கும் இத்திட்டத்தில் மீள்குடியேற்றம் நடைபெறவுள்ள பிரதேசங்களுக்கு முன்னுரிமை அளிக்குமாறு பாராளுமன்ற உறுப்பினர் பசில் ராஜபக்ஷ அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

நீர் விநியோகம், தென்னை மற்றும் பனை வளர்ச்சி, இயற்கைப் பசளைப் பயிர்ச் செய்கைக்கு முன்னுரிமை அளித்தல், ஆஸ்பத்திரி மற்றும் பாடசாலைக் கட்டிடங்களைப் புனரமைத்தல் தொடர்பான தீர்மானங்களும் இக்கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்டன. வட மாகாண ஆளுநர் டிக்ஷன் தால அமைச்சர் ரிசாட் பதியுத்தீன், மாவட்டச் செயலாளர் இமெல்டா சுகுமார், வன்னிக் கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் ரி. ஏ. சந்திரசிறி ஆகியோரும் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply