புலிகளின் கட்டுப்பாட்டை மீறி வட்டக்கச்சி 16 பொதுமக்கள் கேரதீவு சென்றனர்

முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வட்டக்கச்சிப் பிரதேசத்தைச் சேர்ந்த 16 பொது மக்கள் புலிகளின் பிடியிலிருந்து தப்பி வந்து இன்று (நவ.20) நண்பகல் 12.30 மணிக்கு யாழ் கேரைதீவு பிரசேத்திலுள்ள படையினரிடம் தஞ்சம் புகுந்துள்ளதாக படையினர் தெரிவித்துள்ளனர். 08 ஆண்களும் 04 பெண்களும் 04 சிறுவர்களும் இவ்வாறு தஞ்சம் புகுந்துள்ளதாக படையினர் மேலும் தெரிவித்தனர்.

புலிகளின் கொடுமைகளை இனியும் பொறுக்க முடியாது உயிர்களைப் பணயம் வைத்து தப்பி வந்ததாக படையினரிடம் தஞ்சமடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இவர்களுக்குத் தேவையான அடிப்படைவசதிகள் வளங்கப்பட்டு இடைக்கால முகாமுக்கு அனுப்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுப்பதாக படையினர் அறிவித்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply