நலம்புரி முகாம்களிலிருந்தவர்களில் 9,247 முதியவர்கள் விடுவிப்பு

வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து வவுனியா நலன்புரி நிலையங்களிலும் நிவாரணக் கிராமங்களிலும் தற்காலிகமாக வாழ்ந்து வருகின்ற 60 வயதிற்கும் மேற்பட்ட 9,247 முதியவர்கள் நேற்று சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது தொடர்பாக அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில்;

இம்முதியவர்களை பொறுப்பேற்று பராமரிக்க விரும்பும் உறவினர்கள் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சின் வவுனியா, மன்னார் பணிமனைகளில் தொடர்பு கொண்டு விடுவிக்க முன்வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர். இவர்களின் பெயர்ப்பட்டியல் இந்தக் காரியாலயங்களில் மக்களின் பார்வைக்காக வைக்கப்படவுள்ளன. றவினர்களின் வசதி கருதி யாழ். மாவட்டத்தைச் சேர்ந்த முதியவர்களது பெயர், விபரப் பட்டியல் எதிர்வரும் 27 ஆம் திகதி சனிக்கிழமை முதல் யாழ்ப்பாணத்திலுள்ள சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சரது யாழ். பணிமனையில் வைக்கப்பட்டிருக்கும்.

இடம்பெயர்ந்தோர் நலன்களுக்குப் பொறுப்பான உத்தியோகபூர்வ அதிகாரி மேஜர் ஜெனரல் சந்திரசிறி தலைமையில் நடைபெற்ற நிகழ்வின் போது நேற்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் பணிப்பின் பேரில் அமைச்சின் முதியவர்களுக்கான பணிப்பாளர் கோணேஸ்வரன், அமைச்சரின் மன்னார், வவுனியா மாவட்டங்களுக்கான இணைப்பாளர் இளைய தம்பி ஹரிச்சந்திரா ஆகியோர் கலந்து கொண்டு மேற்படி 9,247 முதியவர்களையும் பொறுப்பேற்றுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply