மீன்பிடித்தடை நீக்கப்பட்டதற்கு கூட்டுறவு அமைச்சருக்கு நன்றி தெரிவிப்பு

கிழக்கு கடலில் மீன்பிடித்தொழிலில் ஏற்பட்டிருந்த தடை முற்றாக நீக்கப்பட்டமை குறித்து கிழக்கு மாகாண மீனவர்கள் நன்றி தெரிவித்துள்ளனர். கிழக்கு மாகாணத்தில் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் மீன்பிடித்தடை நீக்கப்பட்டமை குறித்து கிண்ணியா அண்ணல் நகர் அல் ஹிதாய மீனவர் கூட்டுறவு சங்கம் அமைச்சர் நஜீப் ஏ. மஜீத்திற்கு நன்றி தெரிவித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.

அந்தக் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது;

திருகோணமலை மாவட்டத்தின் பிரதான ஜீவனோபாயமாக இருந்த மீன்பிடித்தொழில் சுமார் இரு தசாப்த கால கோரயுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்தது. இதனால் அந்தத் தொழிலையே நம்பி வாழ்ந்த மக்கள் சொல்லொணா கஷ்டங்களையும் வேதனைகளையும் அனுபவித்து வந்தோம்.

இந்த அவலநிலை குறித்து உங்களைச் சந்தித்து விபரித்திருக்கின்றோம். எங்களின் பிரச்சினைகளை நன்கு கேட்டறிந்த நீங்கள் பாராளுமன்றத்திலும் ஜனாதிபதியிடமும் பிரஸ்தாபித்ததை அறிவோம். தங்களின் அயராத முயற்சிகளினால் ஜனாதிபதியின் ஆலோசகரும் பாராளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷவின் மேலான வழிகாட்டலில் மீன்பிடித்தடை முற்றாக நீக்கப்பட்டமைக்கு நாம் நன்றி தெரிவிக்கின்றோம் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply