வெற்றிலைச் சின்னத்தில் வெற்றிக் கூட்டமைப்பு
யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தல்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்தின் கீழ் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி (SLFP), ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி (EPDP), சிறீ தமிழ் ஈழ விடுதலை இயக்கம் (Sri-TELO), ஈழப் புரட்சிகர அமைப்பு (EROS) ஆகியன இணைத்து போட்டியிடத் தீர்மானித்துள்ளன.
இம்முறை ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் பல கட்சிகள் இணைத்து யாழ். மற்றும் வவுனியா உள்ளூராட்சி சபைத் தேர்தல்களில் வெற்றியைச் சின்னத்தில் போட்டியிட உள்ளதாக அமைச்சர் டளஸ் அலஹப்பெரும தெரிவித்தார்.
இம்முறை தேர்தலில் பல கட்சிகள் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து போட்டியிடுவதாகவும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் பட்டியல் இன்று பூர்த்தி செய்யப்படும் எனவும் அவர் கூறினார். முதல்வர் வேட்பாளராக யாரை நிறுத்துவது என்பது குறித்தும் இன்று தீர்மானிக்கப்படவுள்ளதோடு நாளை வேட்பாளர் பட்டியல் தாக்கல் செய்யப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதேவேளை, யாழ் மாநகரசபை மற்றும் வவுனியா நகரசபைத் தேர்தல்களுக்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான வேலைகளில் ஈடுபட்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, வவுனியா நகரசபைத் தேர்தலுக்கான வேட்புமனுவை நாளை புதன்கிழமை தாக்கல் செய்யவிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இது தவிர, ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு யாழ் மாநகரசபைத் தேர்தலில் உதயசூரியன் சின்னத்திலும், வவுனியா நகரசபைத் தேர்தலில் நங்கூரம் சின்னத்திலும் போட்டியிடவுள்ளது. இக்கட்சி தனது வேட்புமனுக்களை இறுதி நாளான நாளை புதன்கிழமை தாக்கல் செய்யவுள்ளது.
அதேநேரம் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட்சி யாழ் மாநகரசபைத் தேர்தலுக்கான வேட்புமனுவை நேற்றுத் திங்கட்கிழமை தாக்கல் செய்திருந்த நிலையில், வவுனியா நகரசபைத் தேர்தலுக்கான வேட்புமனுவை ஐக்கிய தேசியக் கட்சி இன்று செவ்வாய்க்கிழமை தாக்கல் செய்துள்ளது.
மூலம்/ஆக்கம் : TELOnewsYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply