செட்டிகுளத்தில் ஐ.சி.ஆர்.சி.யின் தள வைத்தியசாலை
வன்னியிலிருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கு சேவையாற்ற சர்வதேச செஞ்சிலுவைச்சங்கம் (ஐ.சி.ஆர்.சி.) தள வைத்தியசாலை ஒன்றினை செட்டிகுளத்தில் அமைக்கவுள்ளது. ஏற்கனவே பிரான்ஸ் மற்றும் இந்திய வைத்தியசாலைகள் இங்கு இயங்கிவருகின்றன. அத்துடன், நிவாரணக் கிராமங்களில் சுகாதார அமைச்சின் நடமாடும் வைத்திய சேவைகளும் செட்டிகுளம் மாவட்ட வைத்தியசாலையும் இயங்கிவருகின்றது. எம்.எஸ்.எவ். அமைப்பின் வைத்தியசாலையும் இங்கு இயங்கிவருகின்றன.
நிவாரணக் கிராமங்களில் வசிக்கும் மக்களுடைய சுகாதார நிலைமை திருப்திகரமாக உள்ளதாகவே வவுனியா மாவட்ட சுகாதார திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இங்குள்ள இந்திய வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவில் ஒரு நாளைக்கு 700 முதல் 1,000 வரையிலானவர்கள் சிகிச்சை பெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
நிவாரணக் கிராம மக்கள் குறைந்த செலவில் மருந்துகளைப் பெற்றுக்கொள்ள ஒசுசல மருந்து விற்பனை நிலையமும் இங்கு திறக்கப்பட்டுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply