கமலா ஹாரிஸ் வெற்றி… துளசேந்திரபுரம் கோவிலில் அர்ச்சனை செய்து வழிபட்ட அமைச்சர் காமராஜ்

kamala

அமெரிக்காவில் துணை அதிபர் பதவிக்கு ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்ட இந்திய வம்சாவளி பெண்ணான கமலா ஹாரிஸ்(வயது 55) வெற்றி பெற்றுள்ளார். இவரது பூர்வீக ஊர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உள்ள துளசேந்திரபுரம் கிராமம் ஆகும். கமலா ஹாரிசின் தாய்வழி தாத்தா கோபாலன், பாட்டி ராஜம் ஆகியோர் மன்னார்குடியை அடுத்துள்ள துளசேந்திரபுரம் கிராமத்தை சேர்ந்தவர்கள்.

அமெரிக்க துணை அதிபர் தேர்தலில் முதன் முதலில் இந்திய வம்சாவளியை சேர்ந்த பெண் ஒருவர் வெற்றி பெற்றதால் அவரது சொந்த ஊரான துளசேந்திரபுரம் கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். பட்டாசுகள் வெடித்தும், இனிப்பு வழங்கியும் வெற்றியை கொண்டாடினர். வீட்டு வாசல்களில் ரங்கோலி வரைந்து வாழ்த்து தெரிவித்தனர். அமைச்சர் காமராஜ் அங்குள்ள கோவிலுக்குச் சென்று அர்ச்சனை செய்து வழிபட்டார்.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் காமராஜ் கூறுகையில், “இந்த சிறிய கிராமத்தைச் சேர்ந்த ஒரு பெண் இப்போது அமெரிக்காவில் மிக உயர்ந்த பதவிகளில் ஒன்றில் அமர்கிறார். இது ஒரு பெருமையான தருணம்” என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply