சிறைச்சாலை கூரை மீது ஏறி கைதிகள் ஆர்ப்பாட்டத்தில்

பழைய போகம்பர சிறைச்சாலையின் கூரை மீது ஏறி நின்று சில கைதிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறைக்கைதிகளை தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்துவதற்காக குறித்த சிறைச்சாலை ஒதுக்கப்பட்டுள்ளது.

குறித்த சிறைச்சாலையில் 800 இற்கு அதிகமான கைதிகள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் அதில் 30 கைதிகள் மற்றும் இரு அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறான நிலையில் தங்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்து உடனடியாக பிசிஆர் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறும் இல்லாவிடின் வேறு இடத்திற்கு மாற்றுமாரும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ள கைதிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply