வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களுக்கான மகிழ்ச்சிகர செய்தி:சவேந்திர சில்வா

வெளிநாடுகளில் சிக்கியுள்ள இலங்கையர்களை எதாவது ஒரு முறைமையின் கீழ் நாட்டுக்கு அழைத்துவர தயார் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். எதிர்வரும் 18 ஆம் திகதிக்கு பின்னர் இந்த செயற்பாட்டை தொடர்ச்சியாக மேற்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

வெளிநாடுகளில் தொழில் புரிவோரில் அதிகமானோர் எளிதாகவும் மகிழ்ச்சியாகவும் வேலை செய்வதில்லை. அதனால் அவர்கள் மீண்டும் தாய் நாட்டுக்குவர ஆசைப்படுகின்றனர். கடந்த ஒக்டோபர் 4 ஆம் திகதி நலவிய சூழ்நிலையுடன் வெளிநாடுகளில் உள்ள இலங்கையர்களை நாட்டுக்கு அழைத்து வரும் பணிகள் ஆரம்பமாகின. அந்த செயற்பாட்டை நிறுத்தாது தொடர்ச்சியாக முன்னெடுத்தோம். இன்றும் 186 பேரை கொண்ட குழு நாட்டை வந்தடையவுள்ளது. நேற்று மற்றும் அதனை அண்மித்த நாட்களில் அழைத்துவரப்பட்டவர்களில், மூவர் அல்லது நான்கு பேர் கொரோனா தொற்றை எதிர்கொண்டுள்ளமை உறுதியானது. தோற்று பாதிப்பு ஏற்படாத வகையில் அவர்கள் அழைத்து வரப்படுவார்கள். என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply