பிரதமரின் 75 ஆவது பிறந்த தினம் இன்று

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் 75ஆவது பிறந்த தினம் இன்றாகும்.இதேவேளை ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தை நோக்கிய வெற்றி பயணத்தின் ஓராண்டு பூர்த்தியும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்த தினமும் இன்றாகும்.

1945 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 18 ஆம் திகதி ரூஹூணு கிருவாப்பத்து வீரகெட்டிய கிராமத்தில் பிறந்தார் . இலங்கையின் அரசியல் வரலாற்றில் மிகவும் முக்கியமான ஆளுமையைக் கொண்ட பிரதமராக மஹிந்த ராஜபக்ஷ கருதப்படுகிறார்.

1970ஆம் ஆண்டு பெலியந்த தொகுதியில் இருந்து 1970 இல் முதன்முதலாக பாராளுமன்றத்துக்குத் தெரிவாகி 2005 ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறும் வரை பாராளுமன்ற உறுப்பினராக செயல்பட்டார்..

1994 ஆம் ஆண்டு அரசாங்கத்தை அமைக்க இவர் பெரும் பங்களிப்பு செய்தார். மனித உரிமைகளை பாதுகாப்பதற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆற்றிய சேவைகள் குறிப்பிடத்தகது.

2001ஆம் ஆண்டில் எதிர்க்கட்சித் தலைவராகவும் 2004ஆம் ஆண்டில் நவம்பர் மாதம் (2004 ஏப்ரல் 06 – 2005 நம்பர்19) பிரதமாகவும் 2005ஆம் ஆண்டின் நாட்டின் ஐந்தாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகவும் தெரிவு செய்யப்பட்டார்.

பத்து ஆண்டுகள் ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில் நாட்டில் நிலவிய 30 வருடகால பயங்கரவாதத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டில் சுதந்திரத்தை உறுதிப்படுத்த ஆற்றிய பணிகள் உலகெங்கிலும் பாராட்டை பெற்றுள்ளன.

நாட்டின் அபிவிருத்திக்காவும் அவர் ஆற்றிய பணிகள் மகத்தானவையாகும். ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்திற்குப் பின்னர் பெருந்தெருக்கள் அபிவிருத்தியில் அதாவது நெடுஞ்சாலைகளை அமைப்பதிலும் இவர் முக்கிய பங்கு வகித்துள்ளார்.

குறுகிய காலப்பகுதியில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியை வழி நடத்தி பெரும் வெற்றியை ஈட்டிய பெருமையையும் அவரைச் சாரும். கடந்த தேர்தலில் ஆகக் கூடுதலான வாக்குடன் அவர் மீண்டும் பிரதமராக தெரிவு செய்யப்பட்டார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சார்பில் கடந்த ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டு தெரிவான ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் சுபீட்சத்தை நோக்கிய வெற்றி பயணத்தின் ஓராண்டு பூர்த்தியும் இன்று இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply