புலிகளின் செய்மதி, தொலைபேசிகள் சிம்கார்ட்டுகள் கண்டுபிடிப்பு

கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தேடுதல்களை மேற்கொண்டு வரும் படையினர் புலிகளினால் முன்னர் பயன்படுத்தப் பட்ட செய்மதி தொலைபேசிகள் அவற்றுக்குப் பயன்படுத்தப்படும் புதிய சிம் கார்ட்டுகள் உள்ளிட்ட பெருந்தொகையான வெடிப் பொருட்களை கைப்பற்றியிருப்பதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.

முல்லைத்தீவு மாவட்டம் கல்வியங்காடு பகுதியில் இராணுவத்தின் 59வது படையணியினர் நடத்திய தேடுதலின்போது 12 செய்மதி தொலைபேசிகளும் 13 செய்மதி தொலைபேசிகளுக்கு பயன்படுத்தப்படும் புதிய சிம் கார்ட்டுகளும் கைப்பற்றப்பட்டுள்ளன. இதேவேளை, அப்பகுதியிலிருந்தே 04 திசை காட்டிகள் 06 தொலைகாட்டிகள், 39 – ஜி.பி. எஸ்கள், 14 – போர் துப்பாக்கி காட்ரிஜ்கள் என்பனவும் படையினரால் மீட்கப்பட்டுள்ளன.

இராணுவத்தின் 57 ஆம் படையணியினர் கிளிநொச்சியிலிருந்து ஒன்பது ரி௫6 துப்பாக்கிகளையும் விஸ்வமடு பகுதியிலிருந்து இரண்டு துப்பாக்கிகளையும் ஒரு ஆர்.பி.ஜி. ஆயுதத்தையும் கைப்பற்றியுள்ளனர். அதே படையணியினர் புவன்னிக்குளத்திலிருந்து 58 டெட்டேனேட்டர்கள், 5 கிலோகிராம் நிறை கொண்ட சி 4 வெடி மருந்துகள் உள்ளிட்ட பெருந்தொகையான வெடிப் பொருட்களை மீட்டிருப்பதாகவும் பாதுகாப்பு நிலையம் கூறியது. அக்கராயன்குளத்திலிருந்து 10 கண்ணி வெடிகள், 122 மில்லிமீற்றர் குண்டு ஒன்று ஆர். பி.ஜி. குண்டு ஒன்று என்பனவற்றுடன் ஆலங்குளத்திலிருந்து 87 கண்ணிவெடிகளையும் மூன்றாம் படையணி கண்டுபிடித்துள்ளதாக நிலையம் கூறியது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply