இருபது வருடங்களில் அழித்ததை2 வருடங்களில் கட்டியெழுப்புவோம்: அமைச்சர் டக்ளஸ்

கடந்த இருபது வருடங்களில் அழிவடைந்த எமது பிரதேசத்தை நாம் அனைவரும் ஒன்றிணைந்து இரு வருடங்களில் கட்டியெழுப்புவோமென யாழ். வர்த்தகர்களுடன் இடம்பெற்ற பொதுக்கூட்டத்தில் ஈ. பி. டி. பி. செயலாளர் நாயகமும் சமூக சேவைகள் மற்றும் சமூக நலத்துறை அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார். யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் புதன் மாலை யாழ். வர்த்தகர்கள் மற்றும் வர்த்தக சமூகப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற பொது சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

ஏறக்குறைய ஐநூறிற்கும் மேற்பட்ட யாழ். வர்த்தகர்கள் பங்குகொண்ட இச்சந்திப்பில் தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா ‘நாங்கள் அரசியல் நடவ டிக்கைகளில் ஈடுபடுவது ஆள்வதற்காக அல்ல, மக்கள் சுத ந்திரமாக வாழ்வதற்கும் வர்த்தகர்களாகிய நீங்கள் சுதந்திர மாகவும் நிம்மதியாகவும் தொழில் செய்வதற்குமே ஆகும்.

இதன் அடிப்படையிலேயே, எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலில் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிடும் தீர்மா னத்தை நாம் ஏற்றிருக்கின்றோம். மகிழ்ச்சி தரும் மாற்றங் களையே நாம் விரும்புகின்றோம்.இதில் ஏமாற்றங்கள் நிகழுமாயின் அதற்கான அனைத்து பொறுப்பையும் நாமே ஏற்றுக்கொண்டு எமது தீர்மானங் களைத் திருத்தி எழுதவும் நாம் என்றும் தயாராக இருப் போம்.

ஆனாலும், நாம் எடுத்திருக்கும் இந்தத் தீர்மானம் ஒரு போதும் தோற்றுப் போகாது’ என்றும் தெரிவித்தார்.ஈ. பி. டி. பி. யினராகிய நாம் தமிழ் பேசும் மக்களுக்கான ஒரேயொரு தனித்துவமான அரசியல் கட்சி என்ற ரீதியில் எமது தனித்துவங்களோடு ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்போடு தோழமை கட்சியாக இணைந்து எமது மக்களின் இலட்சியக் கனவுகளை விரைவாகவும், இலகுவாகவும் எட்டுவதற்காக இந்தத் தீர்மானத்தை ஒரு பரீட்சார்த்த முயற்சியாக எடுத்திருக்கின்றோம் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து யாழ். வர்த்தகர்களினால் கேட்கப்பட்ட கேள்விகள், சந்தேகங்கள் அனைத்திற்கும் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா விரிவாக விளக்கமளித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply