பாராளுமன்றுக்கிருந்த அதிகாரங்களை இல்லாமல் செய்தது சந்திரிகா அரசு
தவறிழைக்கும் ஊடகங்கள் தொடர்பில் ஒரு நீதிமன்றத்தைப் போன்று செயற்படுவதற்குப் பாராளுமன்றத்திற்கு இருந்த அதிகாரங்களை இல்லாமற் செய்தமை, சந்திரிகா பண்டார நாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில் மேற்கொள்ளப்பட்ட ஒரு முட்டாள்தனமான நடவடிக்கையாகுமென்று சபாநாயகர் டபிள்யூ. ஜே. எம். லொக்குபண்டார தெரிவித்தார். பத்திரிகையொன்றில் வெளியான கவனக்குறைவான அறிக்கையிடுதல் தொடர்பாக தகவல் ஊடகத்துறை பதில் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன சபையில் திருத்தத்தைத் தெரிவித்தபோதே சபாநாயகர் இதனைத் தெரிவித்தார்.
அமைச்சர் திருத்தத்தை முன்வைத்தபோது “அமைச்சரே இவ்வாறு புகார் தெரிவித்தால், எம்மைப் பற்றிப் பத்திரிகைகளில் வெளியாகும் செய்திகள் குறித்து எவ்வளவோ முறைப்பாடுகளைச் செய்யலாமே! எனவே அமைச்சர் கூறியது பிழையான நடை முறை” என்று ஜே.வி.பி எம்.பி அநுரகுமார திசாநாயக்க கூறினார்.
அதனை மறுத்த சபாநாயகர் “இல்லை ‘முடியும்’ அமைச்சின் சார்பான அறிக்கையினையே அமைச்சர் சமர்ப்பித்தார்” என்றதுடன் ஜே. வி. பீ.யினர் இணைந்திருந்த அரசாங்கம்தான் பாராளுமன்றத்திற்கு இருந்த அருமையான அதிகாரங்களை இல்லாமற் செய்தது. என்றதும் “இல்லை நீங்கள் அங்கம் வகித்த அரசில்தான் நடந்தது” என்றனர் ஜே. வி. பி. உறுப்பினர்கள்.“நான் அமைச்சுப் பதவி வகிக்கவில்லை. என்றாலும் நாம் செய்திருந்தால் அது நாம் மேற்கொண்ட முட்டாள்தனமான வேலைகளில் ஒன்றாகும். சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்தில்தான் அது நடந்தது” என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள கட்டுரைYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply