இலங்கைத் தமிழர் விடயத்தில் தமிழகக் கட்சிகளிடம் ஒற்றுமை தேவை: கருணாநிதி

இலங்கைத் தமிழர் விடயத்தில் தமிழகக் கட்சிகள் ஒற்றுமையாகச் செயற்பட்டு, ஈழத் தமிழர்களுக்கு மாத்திரமன்றி உலகளாவிய ரீதியிலுள்ள தமிழர்களுக்காக ஒன்றுபட்டுச் செயற்படவேண்டுமெனத் தமிழக முதலமைச்சர் மு.கருணாநிதி அழைப்பு விடுத்துள்ளார்.  வன்னியில் இடம்பெயர்ந்த மக்களுக்கான நிவாரணப் பொருள்களை ஏற்றிக்கொண்டு இலங்கைக்கு வந்தபோது இலங்கை கடற்படையினரால் திருப்பி அனுப்பப்பட்ட கப்டன் அலிக் கப்பல் தொடர்பாக சட்டசபையில் விசேட பிரேரணை மீதான விவாதத்தின் போதே அவர் இவ்வாறு அழைப்பு விடுத்தார்.

“தமிழர் விடயத்தில் எமக்குள் பொதுவான நிலைப்பாடு இல்லை என்பதை நாம் அறிந்துகொள்ளமுடியும். நாம் அனைவரும் இணைந்து இலங்கைத் தமிழர்களைப் பாதுகாக்க முயற்சிக்கவில்லை. மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தியபோதும அதில் அனைத்துக் கட்சிகளின் பங்களிப்பும் இருக்கவில்லை. எதிர்க்கட்சிகள் இதில் விலகியேயிருந்தன” என்று தமிழக முதல்வர் சுட்டிக்காட்டினார். எனவே, உலகளாவிய ரீதியிலுள்ள தமிழர்களுக்காக அனைத்துத் தமிழ்க் கட்சிகளும் ஒன்றிணைந்து செயற்படவேண்டுமென அவர் கோரிக்கைவிடுத்தார்.

சென்னைக் கடற்பரப்பில் தங்கியிருக்கும் கப்டல் அலிக் கப்பலிலிருந்து பொருள்களை இறக்கி அவற்றை இலங்கையிலுள்ள மக்களுக்கு வழங்குவது தொடர்பாக மத்திய அமைச்சர் ஏ.ராஜா மத்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.எம்.கிருஷ்ணாவுடன் பேச்சுவார்த்தை நடத்தியிருப்பதாகத் தமிழக முதல்வர் சுட்டிக்காட்டினார். புலம்பெயர்ந்து வாழ் தமிழர்களால் அனுப்பப்பட்ட இந்த நிவாரணப் பொருள்கள் மக்களைச் சென்றடையுமென வெளிவிவகார அமைச்சர் உறுதிமொழி வழங்கியதாகவும் அவர் கூறினார். இந்த உறுதிமொழியை மத்திய அரசாங்கம் நிறைவேற்றுமெனத் தான் நம்புவதாகவும்; மு.கருணாநிதி குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply