புலிகளுக்கு பெரும் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளது – உதய நாணயக்கார

கடந்த சில நாட்களாக இடம்பெற்ற மோதலை அடுத்து விடுதலைப் புலிகளுக்கு பெரும் இழப்புக்கள் ஏற்பட்டுள்ளதுடன் படைத்தரப்புக்கும் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார தெரிவித்தார்.

முகமாலை முதல் கிளாலி வரையில் அமைக்கப்பட்டிருந்த விடுதலைப் புலிகளின் பாதுகாப்பு முன்னரங்கு நிலைகளை படையினர் முழுமையாகக் கைப்பற்றியதாகவும் முகமாலை மற்றும் கிளாலி பாதுகாப்பு முன்னரங்கு நிலையின் சுமார் 8 கிலோமீற்றர் நீளமான நிலப்பரப்பு படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாகவும் உதய நாணயக்கார தெரிவித்தார்.

நாகர்கோயில் முதல் கிளாலி வரை நீண்டு செல்லும் இந்த அணை முற்றாக அழிக்கப்பட்டதை அடுத்தே குறித்த பாதுகாப்பு முன்னரங்கு நிலை முழுமையாகக் கைப்பற்றப்பட்டுள்ளது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply