30 நிமிடங்களில் கொரோனா சோதனை முடிவை சொல்லும் ஸ்மார்ட்போன் தொழில்நுட்பம்

ஸ்மார்ட்போன் கேமரா மூலம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு 30 நிமிடங்களில் முடிவைச் சொல்லும் புதுமையான தொழில்நுட்பத்தை அமெரிக்கா கிளாட்ஸ்டோன் ஆய்வுநிறுவன விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த தொழில்நுட்பம், கொரோனா பாதிப்பு ஏற்பட்டிருக்கிறதா, இல்லையா என்று கூறுவதுடன், கொரோனா வைரஸ் தாக்கம் எந்த அளவு இருக்கிறது என்றும் தெரிவிக்கும்.

‘எங்களின் புதிய தொழில்நுட்பம், தேவையான இடத்தில், விரைவான, துல்லியமான முடிவுகளை அளிக்கும்’ என்று கிளாட்ஸ்டோன் நிறுவன மூத்த விஞ்ஞானி ஜெனிபர் டோட்னா தெரிவித்தார். தற்போதைய புதிய தொழில்நுட்பத்துக்கு அடிப்படையான கண்டுபிடிப்புக்காக, ஜெனிபர் இந்த ஆண்டு வேதியியலுக்கான நோபல் பரிசை பெற்றது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply