மஹர சிறைச்சாலை சம்பவம்: சடலங்கள் ராகம வைத்தியசாலையில்
மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்காக நீதி அமைச்சர் அலி சப்ரி நியமித்த குழுவின் இடைக்கால அறிக்கை நேற்று மாலை நீதி அமைச்சில் அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளது.
மஹர சிறைச்சாலை சம்பவம் தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோகன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் 116 வாக்கு மூலங்கள் பெறப்பட்டுள்ளன. 25 பேர் கொண்ட விசாரணைக் குழு மஹர சிறைச்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சம்பவத்தில் உயிரிழந்த 11 பேரின் பிரேதப் பரிசோதனைகள் இடம்பெறவுள்ளன. இவர்களின் ஏழு பேரின் சடலங்களை உறவினர்கள் அடையாளம் கண்டுள்ளனர். இவர்கள் ஜாஎல, ஹூனுப்பிட்டிய, அங்குருவாத்தோட்ட, வெலிவேரிய, எந்தேரமுல்லை, மினுவங்கொடை ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர்.
உயிரிழந்த எட்டுப் பேருக்கு கொவிட் தொற்றியிருப்பதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. நீதி மன்றத்தின் உத்தரவு கிடைக்கும் வரை இந்த சடலங்கள் ராகம வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply