அணு விஞ்ஞானி மொசென் பக்ரிசாதே கொல்லப்பட்டது எப்படி? : ஈரான் பரபரப்பு தகவல்

Iran

ஈரானின் தலைமை அணு விஞ்ஞானியான மொசென் பக்ரிசாதே கடந்த மாதம் 27-ந்தேதி தலைநகர் டெஹ்ரானில் காரில் சென்று கொண்டிருந்தபோது துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டார். இது ஈரானை கடும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இந்தப் படுகொலையின் பின்னணியில் இஸ்ரேல் இருப்பதாக குற்றம் சாட்டியுள்ள ஈரான் அணு விஞ்ஞானியின் கொலைக்கு பழி தீர்ப்போம் எனவும் சூளுரைத்துள்ளது.

இந்த நிலையில் அணு விஞ்ஞானி மொசென் பக்ரிசாதே எப்படிக் கொல்லப்பட்டார் என்பது குறித்து ஈரான் பரபரப்பு தகவல்களை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து ஈரான் புரட்சிகர படையின் துணைத் தளபதி அலி பதாவி கூறுகையில் ‘தலைநகரின் கிழக்கே ஒரு நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டிக்கொண்டிருந்தபோது மொசென் பக்ரிசாதே கொல்லப்பட்டார். அவரை செயற்கைகோள்களால் கட்டுப்படுத்தப்படும் துப்பாக்கியை பயன்படுத்தி கொன்றுள்ளனர். இதனை நாங்கள் உறுதியாக நம்புகிறோம்’ என்று தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply