நாய் போன்ற தோற்றத்தில் துள்ளி குதித்து பணியாற்றும் ‘ஸ்பாட்’ ரோபோ

 ‘ஸ்பாட்’ ரோபோ

‘ஜிடெக்ஸ்’ கண்காட்சியில் உள்ள அரங்கில் ‘ஸ்பாட்’ ரோபோ என்ற நாய் வடிவ ரோபோ இடம் பெற்றுள்ளது. ‘ஸ்பாட்’ ரோபோ எனப்படுவது தேவையான இடத்தில் அல்லது குறிப்பிட்ட இடத்தில் சென்று பணியாற்றும் தானியங்கி எந்திர வடிவங்களாகும். அதாவது சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று தேவையான அனைத்து விதமான கண்காணிப்பு மற்றும் கோளாறுகளை இந்த வகை ரோபோக்கள் துல்லியமாக கண்டுபிடித்து விடுகின்றன.

‘போஸ்டன் டைனமிக்ஸ்’ என்ற தொழில்நுட்ப நிறுவனத்தின் சார்பில் உருவாக்கப்பட்டுள்ள இந்த ரோபோவில் உடல் பகுதி மற்றும் 4 கால்கள் உள்ளது. இது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் தானாக செயல்படும். அதேபோல் ரிமோட் மூலமாகவும் இதனை இயக்கலாம். இந்த வகை ரோபோக்கள் கரடு முரடான பகுதிகளிலும் பயணிக்கும். குறிப்பாக மாடிப்படிகளில் ஏறி செல்லும் திறன் உடையது.

4 கால்கள் கொண்ட விலங்கு போல மிக நேர்த்தியாக நடக்கிறது. துள்ளி குதித்து விளையாடுகிறது. விளையாடுவது மட்டுமல்லாமல் சிறப்பாக பணியாற்றுவது குறிப்பிடத்தக்கது. இதனால் மணிக்கு அதிகபட்சமாக 3 கி.மீ. வேகத்தில் நடக்க முடியும். தொடர்ந்து 90 நிமிடங்கள் ஓய்வில்லாமல் நடக்கும். இதன் முகப்பு பகுதியில் 360 டிகிரி கோணத்தில் பார்க்க கூடிய கேமரா உள்ளது. இதன் மூலம் கட்டுப்பாட்டு அறையில் இருந்தபடி ரோபோ செல்லும் இடங்களை கண்காணிக்க முடியும்.

முகப்பகுதியில் உணரும் கருவிகள் சூழ்நிலைக்கு தகுந்தவாறு எதிரில் உள்ள பொருட்கள் தடைகளை உணர்ந்து செல்ல பயன்படுகிறது. இந்த ‘ஸ்பாட்’ ரோபோ கீழே தடுக்கி விழுந்தால் தானாக எழுந்து நிற்கிறது. மூடப்பட்ட கதவுகளை திறக்கிறது. இந்த ரோபோக்கள் குறிப்பாக கட்டுமான வேலைகள் நடைபெறும் பகுதியில் பயன்படுத்தலாம். இதன் மூலம் உயர் அழுத்த மின்சார இணைப்புகளில் ஏற்படும் கோளாறுகள் கண்டறிய பயன்படுத்தப்படும்.

மேலும் தண்ணீர் கசிவு, கட்டுமான பகுதியில் பாதுகாப்பு ரோந்து பணி உள்ளிட்டவைகளுக்கு பயன்படுத்தப்படும். இந்த ரோபோக்களினால் குறைந்தபட்சம் மைனஸ் 20 டிகிரியிலும், அதிகபட்சமாக 45 டிகிரி வெப்பநிலையிலும் தடை இல்லாமல் செயல்பட முடியும். இந்த ஸ்பாட் ரோபோ கண்காட்சி அரங்கில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது. இந்த ரோபோ துபாய் மின்சாரம் மற்றும் தண்ணீர் ஆணையத்தில் பயன்படுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply