சமகால அரசாங்கம் பதவி வகித்த காலங்களில் எப்பொழுதுமே வட கிழக்கு அபிவிருத்தியை கைவிட்டதில்லை

சமகால அரசாங்கம் பதவி வகித்த காலங்களில் எப்பொழுதுமே வட கிழக்கு அபிவிருத்தியை கைவிட்டதில்லை.எதிர்வரும் காலங்களிலும் எமது அபிவிருத்தி திட்டங்களை அந்தப் பகுதிகளில் தொடர்ந்தும் முன்னெடுப்போம் என்று அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையிலான அரசாங்க காலத்தில் ஆரம்பிக்கப்பட்ட பெருந்தெருக்கள் அபிவிருத்தித்திட்டம் கடந்த அரசாங்க காலத்தில் இடைநிறுத்தப்பட்டது. இதனால் தான் வீதி அபிவிருத்தியில் தாமதம் ஏற்பட்டது. அதேவேளை அரசாங்கம் என்ற வகையில் வடக்கு கிழக்கு உள்ளிட்ட எல்லா வீதிகளையும் அபிவிருத்தி செய்வதே எமது கொள்ளை. ஒரு லட்சம் கிலோ மீட்டர் வீதித்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்படுகின்றது. அத்துடன் குறைகள் தொடர்பாக விடயங்களை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டுவாருங்கள் என்றும் அமைச்சர் கூறினார்.

பாராளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் உரையாற்றிய போது சுட்டிக்காட்டிய குறைபாடுகளுக்கு அமைச்சர் நாமல் ராஜபக்ச பதில் அளித்த போதே இவ்வாறு தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் நேற்று (08) இடம்பெற்ற குழுநிலை விவாதத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் கலந்துகொண்டு உரையாற்றினார்.

பாராளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன்:

அம்பாறை மாவட்டத்தில் கிட்டோங்க தாம்பேறி என்ற பிரதேசத்தில் மழை காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு பல உயிர்களையும் காவு கொண்டுள்ளது. இந்த இடத்தை மையமாகக் கொண்டு ஒரு பொருத்தமான பாலத்தை அமைத்து தருவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

குறிப்பாக இந்த நாட்டிலே ஆயிரம் கிலோமீட்டர் கொங்கிரீட் பாதைகள் செப்பனிட்ட அந்தந்த காலகட்டத்தில் கூட எமது பிரதேசத்தில் அவ்வாறான எந்தவொரு அபிவிருத்தி வேலைகளும் இடம்பெறவில்லை.
மேலும் இந்த ஒரு லட்சம் கிலோ மீட்டர் காபட் வீதி அபிவிருத்தித் திட்டத்தில் கூட எமது பிரதேசத்தில் எந்த ஒரு வேளை திட்டமும் ஆரம்பிக்கப்படவில்லை.

முப்பது வருடங்களாக அபிவிருத்தியில் பின்தங்கிய இந்தப் பிரதேசம் தொடர்ந்தும் பின்தள்ளப்பட்டுக் கொண்டே இருக்கின்றது. அத்துடன் ‘ஐ ரோட் பிரஜட்’ என்று சொல்லப்படுகின்ற வேலைத் திட்டத்தில் நாம் கல்முனையில் பல விதிகளை தெரிவு செய்திருந்தோம். ஆனால் இப்பொழுது அந்த இடங்களில் அதிகமான வீதிகள் அபிவிருத்தியிலிருந்து நீக்கப்பட்ட வையாக காணப்படுகின்றது.

அத்துடன் அங்கு காணப்படுகின்ற மிக பிரபல்யமான வீரமுனை பிள்ளையார் ஆலயத்திற்கு முன் உள்ள வீதி கூட இதுவரையிலும் செப்பனிடப்படாத நிலையில் இருக்கின்றது. மேலும் அங்கு காணப்படுகின்ற கிராம வீதிகளும் செப்பனிட வேண்டிய நிலையில் உள்ளது. எனவே இவ்வாறான நிலைமைகள் மாற வேண்டும்.

பாராளுமன்ற செல்வராசா கஜேந்திரன்

வடமாகாணத்தின் போக்குவரத்து நிலைமை என்பது எந்த அளவு சீராக உள்ளது என்பது தொடர்பாக பல கேள்விகள் இருக்கின்றது. ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் ஒவ்வொன்றும் வடமாகாணத்தின் போக்குவரத்து துறையில் பணியாற்றுகின்றவர்களை பந்தாடுகின்ற ஒரு நிலைமை அதிகம் இருப்பதாக அவர்கள் கூறுகின்றார்கள்.

ஒரு நிரந்தரமான CRM கிடையாது. மற்றும் விசாரணை சம்பந்தமான கோவைகளை கொழும்புக்கு அனுப்புவதை நிறுத்தி விட்டு வடக்கிலேயே விசாரிக்க, அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவேண்டும்.

தூர பயணங்களை செலுத்துகின்ற சாரதிகள், நடத்துனர்களுக்கு ஓய்வு எடுத்துக் கொள்வதற்கான இடங்கள் அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும்.

அத்துடன் வட மாகாணத்தில் சுனுயு வீதிகள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். அதே நேரத்தில் இங்கு காணப்படுகின்ற இரும்புப் பாலங்களும் சீமெந்துப் பாலங்களாக மாற்றப்பட வேண்டும். வட மாகாண கிராமிய வீதிகள் மற்றும் மாகாண சபைக்கு சொந்தமான விதிகள் திருத்தப்பட வேண்டும். நெடுந்தீவு குறிகாட்டுவான் போக்குவரத்து படகை இயக்குவதற்கு நிரந்தரமான ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். முன்னாள் போராளிகள்இ புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் இதில் தேர்ச்சி பெற்றவர்களாக இருக்கின்றார்கள் அவர்களுக்கு அந்த வேலை வாய்ப்புக்கள் வழங்கப்பட வேண்டும்.

பாராளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன்:

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் முகமாக ஒரு லட்சம் கிலோமீட்டர் பாதைகள் அபிவிருத்தி வேலைத்திட்டத்தினூடாக மலையகத்திலும் என்று பல பாதைகளை அபிவிருத்தி செய்வதற்கான நல்லதொரு சந்தர்ப்பம் எனக்குக் கிடைத்திருக்கின்றது.

தோட்டப் பகுதியில் ஆரம்பிக்கப்பட்ட தோட்டப் பாதைகள் அபிவிருத்தி நல்லாட்சி அரசாங்கத்தின் அரசியல் பழிவாங்கல் ஊடாக நிறுத்தப்பட்டன.

தற்போது இராஜாங்க அமைச்சர் ஜீவன் தொண்டமானுடன் தானும் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க குறித்த அபிவிருத்தி திட்டங்கள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

அத்துடன் தோட்டப் பகுதியில் உள்ள மாணவர்கள் நகர்ப்புற பாடசாலைகளுக்கு செல்லவதில் பல போக்குவரத்து பிரச்சினைகளை எதிர்நோக்குகின்றனர். இது சம்பந்தமாக தகுந்த நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அமைச்சர்களிடம் நான் கேட்டுக்கொள்கின்றேன்.

பாராளுமன்ற உறுப்பினர் வேலுச்சாமி இராதாகிருஸ்ணன்

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தில் நாங்கள் எங்களுடைய மக்களுக்கு சேவை செய்ததன் காரணமாகவே தமிழ் முற்போக்கு கூட்டணி வெற்றி பெற்றது.

ஒரு சிலர் கூறுவது போல நாங்கள் கடந்த அரசாங்கத்தில் சேவை செய்யாமல் இருந்திருந்தால் நாங்கள் வெற்றி பெற்றிருக்க முடியாது.நாங்கள் எங்களுடைய மக்களுக்கு தேவையான அபிவிருத்தியை செய்வதற்கு தயாராகவே இருக்கின்றோம்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply