இலங்கையில், சீனா ரூ.2,210 கோடி முதலீடு
இலங்கையில் சீனா முதலீடுகளை செய்து ஆதிக்கம் செய்ய முயற்சித்து வருகிறது.இதன் மூலம் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுக்கலாம் என்று இலங்கைக்கு கடன்களை கொடுத்து இருக்கிறது.
இந்த நிலையில் இலங்கையின் ஹம்பாந்தோட்டா துறைமுகம் அருகே ரூ.2,210 கோடி முதலீட்டில் சீனா, டயர் தொழிற்சாலையை அமைக்கிறது என்று இலங்கை அறிவித்துள்ளது.
சீனாவிடம் இருந்து இலங்கை வாங்கிய 1.4 பில்லியன் டாலர் கடனை கட்ட தவறியதால் டயர் தொழிற்சாலையை அமைக்க சீனா பயன்படுத்தி கொண்டுள்ளது.
தாராளமான வரி சலுகைகளை அனுமதிக்கும் சட்டத்தின் கீழ் டயர்ஆலை அமைக்க இலங்கை அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது என்று கெஹெலியா ரம்புக்வெல்லா தெரிவித்தார்.
மேலும் அவர் கூறும் போது, “இந்த நிறுவனம் 80 சதவீதம் உற்பத்தியை ஏற்றுமதி செய்யும். 20 சதவீதம் உள்ளூர் சந்தையில் விற்க விரும்புகிறது” என்று கூறினார்.
இலங்கையில் ஆதிக்கம் செலுத்த முயற்சி செய்து வரும் சீனா தற்போது பெரிய முதலீட்டால் தொழிற்சாலையை அமைக்கிறது. இந்த நடவடிக்கைகளை இந்தியா உன்னிப்பாக கவனித்து வருகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply