வவுனியா மாவட்டத்தில் 25 கிராமங்களில் முதற்கட்ட மீள் குடியேற்றம்

வடக்கின் வசந்தம் 180 நாள் வேலைத் திட்டத்தின் கீழ் வவுனியா மாவட்டத்தில் முதற்தடவையாக சுமார் 800 குடும்பங்களை மீள்குடியமர்த்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி பீ. எஸ். எம். சார்ள்ஸ் தெரிவித்துள்ளதாக அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வவுனியா மாவட்டத்தின் ஓமந்தை, பூவரசங்குளம் உட்பட 25 கிராமங்களில் முதற்கட்ட மீள்குடியேற்ற பணிகள் அடுத்தவாரம் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் இது தொடர்பான இறுதிக் கட்ட அறிக்கை எதிர்வரும் மூன்றாம் திகதி ஜனாதிபதி செயலகத்திடம் கையளிக்கப் படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

வவுனியா நலன்புரி முகாம்களிலும், நிவாரணக் கிராமங்களிலும் தங்கவைக்கப்பட்டுள்ள சுமார் 800 குடும்பங்கள் மீள்குடியமர்த்துவதற்காக அடையாளம் காணப்பட்டுள்ளன. இவர்களை மீளக் குடியமர்த்துவது தொடர்பாகத் தயாரிக்கப்பட்டுள்ள இறுதித் திட்ட அறிக்கை ஜனாதிபதி செயலகத்திடம் கையளிக்கப்பட்டதன் பின்னர் மீள்குடியேற்றம் ஆரம்பமாகுமென்று வவுனியா அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.வடக்கு மீள்குடியேற்றத் திட்டத்தின் கீழ் அண்மையில் மன்னார் முசலி பகுதியில் மக்கள் தமது சொந்த வாழ் விடங்களில் மீள்குடியேற்றப்பட்டார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply