சீனாவில் சினோபார்ம் நிறுவன தடுப்பூசிக்கு ஒப்புதல்
உலகுக்கு கொரோனா வைரசை வழங்கிய சீனாவில், அந்த வைரசை தடுத்து நிறுத்த ஏதுவாக சினோபார்ம் நிறுவனம் தடுப்பூசியை உருவாக்கி உள்ளது. இந்த தடுப்பூசிக்கு சீன தேசிய மருத்துவ தயாரிப்புகள் நிர்வாகம் நேற்று ஒப்புதல் அளித்தது.
இந்த தடுப்பூசியானது 79 சதவீதத்துக்கும் அதிகமான செயல்திறனை கொண்டுள்ளது என சினோபார்ம் நிறுவனத்தின் துணை நிறுவனமான பீஜிங் உயிரியல் தயாரிப்புகள் நிறுவனம் நேற்று முன்தினம் அறிவித்தது.
இந்த தடுப்பூசி ஏற்கனவே பக்ரைன், ஐக்கிய அரசு அமீரகம் ஆகியவற்றில் ஒப்புதலைப் பெற்றுவிட்டது நினைவுகூரத்தக்கது. இந்த தடுப்பூசியின் செயல்திறன் தொடர்ந்து ஆய்வு செய்யப்படும் என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த தடுப்பூசி 10 லட்சம் பேருக்கு போடப்பட்டு விட்டதாகவும், சீனாவுக்கு வெளியே 60 ஆயிரம் பேருக்கு இந்த தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாகவும் ஏற்கனவே தகவல்கள் வெளியாகி உள்ளன.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply