பைசர் தடுப்பூசி போட்ட பெண் மருத்துவர் அரை மணிநேரத்தில் ஐசியுவில் அனுமதி
மெக்சிகோவில் வசித்து வரும் 32 வயது பெண் மருத்துவர் ஒருவருக்கு கொரோனா பாதிப்புகளை தடுக்கும் வகையில் பைசர் தடுப்பூசி செலுத்தப்பட்டது. ஆனால், அவரது உடல்நிலை மோசமடைந்து உள்ளது. இதனால் அவர் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
இதுபற்றி அந்நாட்டின் சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தியில், அந்த பெண் மருத்துவருக்கு பைசர் தடுப்பூசி போடப்பட்ட அரை மணிநேரத்தில் தசை பலவீனம் மற்றும் சுவாசக் கோளாறுகள் உள்ளிட்டவை ஏற்பட்டு உள்ளன என தெரிவித்துள்ளது.
இந்த பக்க விளைவுகள் பற்றி ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன. அவருக்கு என்செபலோமைலிட்டிஸ் பாதிப்பு இருக்கக்கூடும் என கூறப்படுகிறது. சிகிச்சையை அடுத்து அவரது நிலை சீராக உள்ளது. அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். பிற மருந்துகளை எடுத்து கொள்ளும்பொழுது, அந்த பெண் மருத்துவருக்கு ஒவ்வாமை விளைவுகள் ஏற்பட்ட கடந்த கால அனுபவங்கள் உள்ளன என்றும் கூறப்படுகிறது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply