கொலைக் குற்றவாளியாக இருந்த நபரொருவர் கைக்குண்டுடன் கைது

கைக்குண்டு ஒன்றை வைத்திருந்த கொலைக்குற்றவாளியாக இருந்த நபரொருவர் வெல்லம்பிட்டி சிங்கபுர பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். வெல்லம்பிட்டி பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் இவர் கைது செயயப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கடந்த 1999 ஆம் ஆண்டு கொலை குற்றம் தொடர்பில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் தண்டனை குறைப்பு காரணமாக கடந்த 2018 ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டிருந்தார்.

சிறையில் இருந்த போது நீதிபதி சரத் அம்பேபிடிய கொலையின் பிரதான சந்தேகநபரான பொட்டு நௌபருக்கு சிறைச்சாலையினுள் வைத்து தாக்கிய சம்பவம் தொடர்பிலும் இவருக்கு ஒரு வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டிருந்ததாக பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

கடந்த தினத்தில் சிங்கபுர பிரதேசத்தில் மூன்று வீடுகளுக்குள் புகுந்து அச்சுறுத்தியமை மற்றும் தாக்குதலில் ஈடுபட்டமை ஆகிய சம்பவங்கள் தொடர்பில் சந்தேகநபருக்கு எதிராக வெல்லம்பிட்டி பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த சந்தேகநபருடன் அவரின் உதவியாளர் ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply