டெல்லி நிர்பயா சம்பவம் போல இளம்பெண்ணை கொடூரமாக கற்பழித்து கொன்ற கும்பல்
2012-ம் ஆண்டு டெல்லியில் நிர்பயா என்ற துணை மருத்துவ மாணவி ஒரு கும்பலால் பஸ்சில் கடத்தி செல்லப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார். இது நாடு முழுவதும் கடும் அதிர்வலையை ஏற்படுத்தியது.இந்த நிலையில் உத்தரபிரதேச மாநிலம் பதுன் மாவட்டத்தில் நிர்பயா சம்பவம் போல கொடூர கற்பழிப்பு சம்பவம் நடந்துள்ளது.
அங்குள்ள உகாய்தி என்ற கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு வீட்டில் இருந்து கோவிலுக்கு சென்றார்.
கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு திரும்பிய அந்த பெண்ணை காரில் வந்த 3 பேர் கடத்தி சென்றனர். அவர்கள் காட்டுப்பகுதிக்கு கொண்டு சென்று மாறி மாறி கற்பழித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்த அவரை கொடூரமாக தாக்கினார்கள். இதில் அவரது இடுப்பு மற்றும் கால் எலும்புகள் முறிந்தன.
டெல்லி நிர்பயா போலவே மர்ம உறுப்பில் இரும்பு கம்பியை செலுத்தி கொடுமைப்படுத்தினார்கள். இதனால் ரத்தம் வெளியேறி உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அவரை புதருக்குள் போட்டுவிட்டு தப்பி சென்று விட்டனர்.
கோவிலுக்கு சென்ற பெண் திரும்பி வராததால் அவரது குடும்பத்தினரும், உறவினர்களும் பல இடங்களிலும் தேடினார்கள். அதிகாலையில் அவரை கண்டுபிடித்தனர். சிறிது நேரத்திலேயே அவர் இறந்து விட்டார்.
இதுபற்றி போலீசில் புகார் செய்யப்பட்டது. ஆனால் அவர்கள் இதை கண்டுகொள்ளவே இல்லை. 18 மணி நேரத்துக்கு பிறகு தான் நடவடிக்கை எடுத்தனர்.
பெண்ணின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பெண் டாக்டர் உள்பட 3 டாக்டர்கள் கொண்ட குழு பிரேத பரிசோதனை செய்தது.
குற்றவாளிகளை கண்டு பிடிக்க 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டது. அவர்கள் விசாரணை நடத்தியதில் அந்தப்பகுதியைச் சேர்ந்த மகான்பாபா சத்திய நாராயணா, அவரது உதவியாளர் வேதராம், டிரைவர் ஜெயபால் ஆகியோர் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்டது தெரிய வந்தது. அவர்கள் தலைமறைவாகி விட்டனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply