வடபகுதி தேடுதல்களில் பெருமளவு ஆயுதம் மீட்பு
வடக்கின் வெவ்வேறு பகுதிகளில் பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட தேடுதலின் போது பெருந்தொகையான வெடி பொருட்களும் ஆயுதங்களும் கைப்பற்றப்பட்டிருப்பதாக தேசிய பாதுகாப்பு தொடர்பான ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.யாழ்ப்பாணம், வன்னி, இரணைமடு, நாணற்குளம், புதுக்குடியிருப்பு கிழக்கு, புதுக்குடியிருப்பு மேற்கு, வெள்ள முல்லிவாய்க்கால், பெரிய மடு ஆகிய பகுதிகளிலிருந்தே இராணுவத்தின் 5 ஆம், 3 ஆம், 8 ஆம் மற்றும் 58, 57 ஆம் படையணியினர் இவற்றைக் கைப்பற்றியிருப்பதாகவும் ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.இதன் போது 5 ஆயிரத்து 850 ரி௫6 ரக ரவைகள் 300 எம்.பி.எம்.ஜி. ரவைகள் மீட்கப்பட்டிருப்பதாக இராணுவ அதிகாரியொருவர் சுட்டிக்காட்டினார்.
யாழ்ப்பாணத்திலிருந்து 5 ஆம் படையணியினர் நேற்று முன்தினம் மாலை 6 மணியளவில் 03- கிரனேற் குண்டுகள், மூன்று கிலோ கிராம் நிறை கொண்ட 01 கிளோமோர், 01 தொடர்பாடல் தொகுதி, 03 சயனைற் வில்லைகள், 03 வரை படங்கள், 01 கெசட் பிளேயர், 01 சிம் கார்ட் ஆகியவற்றுடன் 11 ஆயிரத்து 500 ரூபா பணத்தையும் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை ஜெயபுரம் பகுதியிலிருந்து படையினரால் 68 கண்ணிவெடிகளும் மீட்கப்பட்டிருப்பதாக ஊடக மத்திய நிலையம் குறிப்பிட்டது. வன்னியில் 57 ஆம் படையணியினர் 09 கிரெனேற் கைக்குண்டுகளை மீட்டுள்ளனர். புள்ளியான் பொக்கனை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின் போது 01 துப்பாக்கி, 01 – ரி௫6 துப்பாக்கி மற்றும் 02 கிரெனேற் கைக்குண்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
இரணைமடுவில் 58 ஆம் படையணியினர் 1000 – ரி 56 அம்யுனிசன்களுடன் 03 கிரெனேற் கைக்குண்டுகள், 18 கண்ணிவெடிகள் ஆகியவற்றை மீட்டுள்ளனர். வெல்லமுள்ளி வாய்க்காலில் 8 ஆம் படையணியினரால் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் போது 05 ரி 56 ஆயுதங்கள், 01 தொலைக்காட்டி, 03 எம். பி. எம். ஜி. இணைப்புகள், 300 எம். பி. எம். ஜி. ரவைகள், 05 ஆர். பி. ஜி. குண்டுகள், 08 புகைப்பட அல்பங்கள் என்பவற்றுடன் ஆயிரத்து 654 ரூபா பணமும் கைப்பற்றப்பட்டிருப்பதாக ஊடக மத்திய நிலையம் தெரிவித்தது.
இதே படை அணியினரால் பட்டிகரை பகுதியிலிருந்து 02 82 மில்லி மீற்றர் குண்டுகள், 07 ஆர். பி. ஜிகள், 07 பூமி பொறிகள், 04 60 மில்லி மீற்றர் குண்டுகள், 01 81 மில்லி மீற்றர் குண்டு, 10 கிரெனேற் கைக்குண்டுகள், 4150 ரி 56 ரவைகள், 02 ரி56 ஆயுதங்கள் என்பன கைப்பற்றப்பட்டிருப்பதாகவும் இராணுவத்தினர் தெரிவித்தனர்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply