நுரைச்சோலை அனல்மின் நிலையம் 2ஆம், 3ஆம் கட்டப் பணிகளை ஆரம்பிக்க சீனா இலங்கை இன்று ஒப்பந்தம் கைச்சாத்து

நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்ட பணிகளை ஆரம்பிப்பது தொடர்பாக சீன அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்குமிடையில் இன்று 29ம் திகதி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட உள்ளது இரண்டாம், மூன்றாம் கட்டங்களின் கீழ் 600 மெகா வோர்ட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படவுள்ளதோடு இதற்கு சீன அரசு 892 மில்லியன் டொலரை இலகு கடனாக வழங்க உள்ளதாக மின்சக்தி எரிசக்தி அமைச்சு கூறியது. நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் முதலாம் கட்ட பணிகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதோடு 2010 முதல் 300 மெகா வோர்ட் மின்சாரம் இதனூடாக உற்பத்தி செய்யப்படவுள்ளது.

இரண்டாம் கட்டத்தில் 300 மெகா வோர்ட் மின்சாரமும் மூன்றாம் கட்டத்தின் கீழ் மேலும் 300 மெகா வோர்ட் மின்சாரமும் உற்பத்தி செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. 2ஆம், 3ஆம் கட்டப் பணிகள் 2013ல் பூர்த்தி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அமைச்சு கூறியது.

சீன கடனுதவியை பெறுவது தொடர்பான ஒப்பந்தம் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் மின்சக்தி எரிசக்தி அமைச்சர் டபிள்யு. டி. ஜே. செனவிரத்ன மின்சார முக்கியஸ்தர்கள் பலரும் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர். இலங்கை சார்பாக மின்சார சபையும் சீனா சார்பாக சி. எம். சி. கம்பனியும் கைச்சாத்திட உள்ளன.சீன அரசின் இலகு கடன் காரணமாக இலங்கைக்கு 491 மில்லியன் டொலர் பொருளாதார நன்மை ஏற்பட்டுள்ளதாகவும் அமைச்சு குறிப்பிட்டது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply