மத்தியகிழக்கில் 89 இலங்கையர் கொரோனாவுக்குப் பலி : அமைச்சர் நிமால்

வெளிநாடுகளிலுள்ள புலம்பெயர் தொழிலாளர்களை திருப்பி அழைப்பது தொடர்பில் மந்தமான செயற்பாடு நிலவுவதாக விமர்சனங்கள் அதிகரிக்கும் நிலையில் கொவிட்-19 காரணமாக மத்தியகிழக்கில் 89 இலங்கையர் உயிரிழந்துள்ளதாக தொழில்துறை அமைச்சர் நிமால் ஸ்ரீபால டி சில்வா தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி தலைவர் அனுரகுமார திஸாநாயக்க எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அமைச்சர் மேலும் கூறுகையில்,
“மத்திய கிழக்கில் 3923 இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்கள் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் 3823 போ் டிசம்பர் 30ஆம் திகதிக்குள் குணமடைந்துள்ளனர்.
இதுவரை 31,102 இலங்கையின் புலம்பெயர் தொழிலாளர்கள் மத்தியகிழக்கிலிருந்து நாடு திரும்பியுள்ளனர்.

மத்தியகிழக்கிலுள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் 82 மில்லியன் ரூபாவை செலவிட்டுள்ளது. மத்தியகிழக்கு தொழிலாளர்கள் தவிர உலகின் பல நாடுகளிலிருந்து 30,648 புலம் பெயர் தொழிலாளர்கள் திருப்பி அழைக்கப்பட்டுள்ளனர்.

137 நாடுகளிலிருந்து சுமார் 69,000 தொழிலாளர்கள் தற்போது இலங்கைக்கு திரும்புவர் என எதிர்பார்க்கிறோம்” என்றார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply