தனது அணியில் இருந்தவர்களில் இது வரை 900 பேர் இராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர்: அமைச்சர் முரளீதரன்
கிழக்கு மாகாணத்தில் தனது அணியில் இருந்தவர்களில் இது வரை 900 பேர் இராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக தேசிய நல்லிணக்க அமைச்சர் விநாயகமூர்த்தி முரளீதரன் (கருணா அம்மான்) கூறுகின்றார். குறிப்பிட்ட 900 பேரில் இது வரை 600 பேர் முழுமையாக இராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்கள்.ஏனையோர் இராணுவத்தில் இருந்தாலும் தற்போது ஆவணங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்ற.இன்னும் ஒரு மாத காலத்திற்குள் அவர்களும் முழமையாக இராணவத்தில் சேர்க்கப்பட்டு விடுவார்கள் ” என்றும் தெரிவித்துள்ள அவர்
“ஆரம்பத்தில் சாதாரன சிப்பாய்களாகவே இவர்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் சிலர் அதிகாரிகாளக நியமனம் பெற வாயப்புகள் இருக்கின்றன. கடந்த இரு தினங்’களுக்கு முன்பு இராணுவ தளபதியை சந்தித்து உரையாடிய போது தமிழ் இராணவ கட்டமை்பை உருவாக்கம் திட்டமொன்று உள்ளது.இது வரவேற்கத் தக்கது.காரணம் .இவ்வாறு உருவாக்கப்படுகின்ற போது முப்படைகளிலும் தமிழர்கள் இருக்கின்ற பொழுது ஒரு பாராபட்சமற்ற பாதுகாப்பு படை செயல்படுவதற்கு வாயப்பு இருக்கின்றது.
இராணவத்தில் சேர்க்கப்பட்டுள்ள 900 பேரும் தற்போது கிழக்கு மாகாணத்திலேயே செயலாற்றுவார்கள்.அதற்காய வாயப்பு தான் இருக்கின்றது.வேறு இடங்களுக்கு அனுப்பி வைக்க வேண்டிய தேவை இல்லை.தற்போது யுத்தம் முடிவடைந்துள்ளதால் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்கள் கிழக்கு மாகாணங்களில் நிரந்தரமாக அமைக்கப்படவுள்ள இராணுவ தளங்களிலேயே பணியாற்றுவதற்கு வாயப்புகள் உள்ளன.” என்றார் கருணா அம்மான்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply