பைசர் தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் செலுத்திக்கொண்டார் ஜோ பைடன்

உலகளவில் கொரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளிலும், அதிக உயிரிழப்புக் கொண்ட நாடுகளிலும் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.கொரோனாவை கட்டுப்படுத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்ட போதிலும் பரவல் அதிகமானது. இதற்கிடையே கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்து கண்டறியப்பட்டது அந்நாட்டு மக்களுக்கு ஆறுதலை ஏற்படுத்தியது.

சமீபத்தில் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்வு செய்யப்பட்டார். வரும் வாரத்தில் ஜோ பைடன் அதிபராக பதவியேற்க உள்ளார்.

இதற்கிடையே, அமெரிக்காவின் டெலாவேர் மாகாணத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் ஜோ பைடனுக்கு நேரலையில் கொரோனா தடுப்புக்கான பைசர் மருந்தின் முதல் டோஸ் கடந்த சில வாரங்களுக்கு முன்பு செலுத்தப்பட்டது.

இந்நிலையில், பைசர் தடுப்பூசியின் 2-வது டோசையும் ஜோ பைடன் செலுத்திக்கொண்டுள்ளார்.

அதன்பின் செய்தியாளர்களை சந்தித்த ஜோ பைடன், மக்களுக்கு கொரோனா தடுப்பூசி கிடைக்கச் செய்வதே தனது முன்னுரிமையான பணி என தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply