வடக்கில் எங்கெல்லாம் தூபிகள் இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் முழுமையாக இடித்தழிக்க வேண்டும் : அமைச்சர் விமல்
மரணித்த தமிழீழ விடுதலைப் புலிகளை தூபிகள் அமைத்தோ அல்லது பகிரங்க நிகழ்வுகள் நடத்தியோ நினைவேந்துவது நாட்டின் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் பெரும் குற்றமாகும். எனவே, விடுதலைப் புலிகளை நினைவேந்தும் தூபிகள் வடக்கில் எங்கெல்லாம் இருக்கின்றனவோ அவற்றை முழுமையாக இடித்தழிக்க வேண்டும் என்று அமைச்சர் விமல் வீரவன்ச தெரிவித்தார்.
யாழ். பல்கலைக்கழத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க் கால் நினைவுத்தூபி இடிக்கப்பட்டமை தொடர்பில் கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“ஒரு பொறுப்பு வாய்ந்த அதிகாரி என்ற வகையில் தனக்குள்ள அதிகாரத்தைப் பயன்படுத்தி யாழ். பல்கலைக்கழத்தில் அமைக்கப்பட்டிருந்த தூபியைத் துணைவேந்தர் இடித்து அகற்றியுள்ளார். இது அவரின் தற்றுணிவை எடுத்துக் காட்டுகின்றது.
இறுதிப் போரில் மரணித்த பொதுமக்களை நினைவேந்தும் தூபி என்ற பெயரில் அங்கு அமைக்கப்பட்டிருந்தது புலிகளை நினைவேந்தும் தூபியே ஆகும்.
இதைப் பல்கலைக்கழத்தில் வைத்திருப்பது சட்ட விரோதமானது. அதற்கமைய நல்லதொரு தீர்மானம் எடுத்து அந்தத் தூபியைத் துணைவேந்தர் இடித்துள்ளார்.
மூவின மாணவர்களின் நன்மை கருதி இந்தத் தீர்மானத்தை அவர் எடுத்திருப்பார் என நான் நினைக்கின்றேன். எனவே, மாணவர்கள் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபடாமல் கல்வியைத் தொடர வேண்டும்” என்றார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply