பொங்கல் பண்டிகை – சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய கொண்டாடுமாறு ஆலோசனை

எதிர்வரும் வியாழக்கிழமை தைப்பொங்கல் பண்டிகையை சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய கொண்டாட வேண்டியதன் அவசியத்தை சுகாதார அதிகாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.

முடிந்தளவு நடமாட்டங்களை தவிர்த்து, சமூக இடைவெளியை பேணுமாறு சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவுக்கு பொறுப்பான விசேட நிபுணர் சுதத் சமரவீர கேட்டுக் கொண்டார்.

முடிந்தளவு பயணங்களை தவிர்க்க வேண்டும். விடுமுறை என்ற காரணத்தால் வெளியே செல்லக் கூடாது. அத்தியாவசிய காரணங்களுக்காக வெளியில் செல்கையில் சுகாதார விதிமுறைகளை அணுசரிக்க வேண்டும். குறிப்பாக மேல் மாகாணத்திலிருந்து வெளி மாவட்டங்களுக்கு செல்பவர்கள் வீடுகளில் தங்கியிருப்பது அவசியம் என்றும் விசேட நிபுணர் சுதத் சமரவீர மேலும் குறிப்பிட்டார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply