இந்தியாவின் முதல் கொரோனா தடுப்பூசியை பெற்ற துப்புரவு பணியாளர்
நாடு முழுவதும் உள்ள 3006 மையங்களில் கொரோனா தடுப்பூசிகள் செலுத்தும் பணி தொடங்கி நடைபெறுகிறது. தமிழத்தில் 166 மையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது. நாடு முழுவதும் முதல் நாளில் சுமார் 3 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த மாபெரும் தடுப்பூசி திட்டத்தை பிரதமர் மோடி காணொளி வாயிலாக துவக்கி வைத்ததும், முதலில் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தடுப்பூசி போடும் பணி தொடங்கியது. முதல் தடுப்பூசி துப்புரவு பணியாளர் மணிஷ் குமாருக்கு செலுத்தப்பட்டது. அதன்பின்னர் சுகாதார பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள் என மற்றவர்களுக்கு செலுத்தப்பட்டது.
எய்ம்ஸ் மருத்துவமனை இயக்குனரான டாக்டர் ரன்தீப் குலேரியாவும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் தடுப்பூசி போட்டுக்கொண்டார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply