ரஞ்சன் ராமநாயக்கவிற்கு மேன்முறையீடு செய்யும் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் : மக்கள் சட்டத்தரணிகள்
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு எதிராக வழங்கப்பட்டுள்ள நீதிமன்ற தீர்ப்பை மேன்முறையீடு செய்யும் சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் என மக்கள் சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பாதுகாப்பு சாசனத்தில் இலங்கை கைச்சாத்திட்டுள்ளதானால் ரஞ்சனுக்கு மேன்முறையீட்டு உரிமை வழங்கப்பட வேண்டும் என மக்கள் சட்டத்தரணிகள் சங்கத்தின் உறுப்பினர் மஞ்சு ஶ்ரீ சந்திரசேன தெரிவித்துள்ளார்.
நீதிமன்ற அவமதிப்பு சட்டம் மற்றும் குற்றவியல் சட்ட சித்தாந்தங்களுக்கு இடையில் குழப்பம் காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த குழப்பத்தை நிவர்த்தி செய்யும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வருமாறு மக்கள் சட்டத்தரணிகள் சங்கம் நீதி அமைச்சர் அலி சப்ரியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு குற்றத்திற்கு பொருத்தம் எனக் கருதும் தண்டனையை வழங்கக்கூடிய ஏற்பாடு அரசியல் யாப்பின் 105வது சரத்தில் காணப்படுவதாகவும் ஆனால் நீதிமன்ற அவமதிப்புக்கு வழங்கப்படும் தண்டனை என்ன என்பதை பிரஜை அறிந்திருக்க வேண்டியது அவசியம் என சட்டத்தரணி மஞ்சு ஶ்ரீ சந்திரசேன குறிப்பிட்டுள்ளார்.
2007ம் ஆண்டு இலங்கை கைச்சாத்திட்ட சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் பாதுகாப்பு சாசனத்தின் படி யாப்பின் 56ம் சரத்தில் தண்டனை பெறும் அனைத்து கைதிகளுக்கும் மேன்முறையீடு செய்யும் உரிமை இருக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது. ஆனால் ரஞ்சன் ராமநாயக்கவிற்கு அந்த சந்தர்ப்பம் இல்லை எனவும் நிச்சயம் அவருக்கு அது வழங்கப்பட வேண்டும் எனவும் மக்கள் சட்டத்தரணிகள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply