13வது திருத்தத்திற்கு அமெரிக்கா ஆதரவு: பிளேக்

13வது திருத்தத்தை அமுல்படுத்துவதற்கு அமெரிக்கா ஆதரவளிக்குமென தெற்கு மற்றும் மத்திய ஆசியாவுக்கான அமெரிக்கத் தூதுவர் ரொபேர்ட்.ஓ.பிளேக் தெரிவித்துள்ளார்.  இலங்கையில் நிரந்தரமான சமாதானத்தை ஏற்படுத்த 13வது திருத்தத்தை முழுமையாக அமுல்படுத்தவேண்டுமென கடந்த வியாழக்கிழமை வொஷங்டனில் காங்கிரஸ் அமர்வின்போது ரொபேர்ட்.ஓ.பிளேக் குறிப்பிட்டார். வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உட்பட சகல மாகாணங்களிற்கும் அதிகாரங்களைப் பகிர்ந்தளிக்க 13வது திருத்தம் உதவுமெனக் கூறிய அவர், ஏற்கனவே, இந்தப்13வது திருத்தம் பாராளு மன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டு பின்னர் உயர்நீதி மன்றத்தினது அங்கீகாரம் பெறப்பட்டிருந்ததாகவும் சுட்டிக்காட்டினார். எனினும், இந்தப் 13வது திருத்தத்தின் ஒரு பகுதியே அமுல்ப்படுத்தப்பட்டிருப்பதாகவும்; ரொபேர்ட்.ஓ.பிளேக் தெரிவித்தார்.

13வது திருத்தத்திலும் குறைவானவற்றை சிங்களக் கட்சிகள் வலியுறுத்துகின்ற அதேவேளை, தமிழ்க் கட்சிகள் 13வது திருத்தத்திலும் அதிகமானவற்றை வலியுறுத்துவதாகவும் ரொபேர்ட்.ஓ.பிளேக் குறிப்பிட்டார்.

இது தவிர, இலங்கையில் மாகாணங்களைப் பிரதிநிதித்துவம் செய்வதற்கென மேல்மாகாணசபை எனப்படும் இரண்டாவது மாகாணசபையொன்றை ஏற்படுத்திக்கொள்ளவேண்டியதன் அவசியத்தை சுட்டிக்காட்டியிருக்கும் ரொபேர்ட்.ஓ.பிளேக், இலங்கையிலிருக்கும் மூவின மக்களுக்கு இடையில் அரசியல் நல்லிணக்கத்தை உருவாக்குவதற்கு இந்த நடவடிக்கை உதவுமெனவும் தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply