இவ்வாரம் பாராளுமன்ற அமர்வுகள் இடம்பெறுமா?

கொவிட்-19 கொரோனா தொற்றுக்கு மத்தியில் நாளை முதல் வழமைப்போல பாராளுமன்ற அமர்வுகளைக் கூட்டுவதா? இல்லையா? என்பது தொடர்பில் இன்று தீர்மானிக்கப்படவுள்ளது. இந்த வார பாராளுமன்ற நடவடிக்கைகள் குறித்து இறுதி தீர்மானம் எடுக்கப் பாராளுமன்றம் சபாநாயகர் தலைமையில் கீழ் இன்று காலை கூடவுள்ளது.

கட்சித் தலைவர்களின் கூட்டம் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெறத் திட்டமிடப்பட்டிருந்தாலும் அது இன்றுவரை ஒத்திவைக்கப்பட்டது. இந்த வார பாராளுமன்ற அமர்வுகள் நாளை முதல் ஆரம்பிக்கவுள்ளனர்.

இதன்போது பாராளுமன்ற அமர்வை நடத்திச் செல்லல் மற்றும் சுகாதார பாதுகாப்பு திட்டங்கள் குறித்துத் தீர் மானிக்கப்படவுள்ளதாக படைக்கள சேவிதர் நரேந்திர பெர்ணாண்டோ தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 943 பேருக்கு மேற்கொண்ட பி.சி.ஆர். பரிசோதனையில் பாராளுமன்ற பணிக்குழு மற்றும் ஏனைய பணிக்கங்களுக்கு உட்பட்ட 5 பேர் அடங்களாக 9 பேருக்கு இதுவரை கொவிட் 19 கொரோனா தொற் றாளர்களாக அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அவர்களில் மூன்று பேர் பாதுகாப்பு பிரிவு மற்றும் பாராளுமன்றத்திற்கு வெளியே பாதுகாப்பு வலயத்தில் கடமையாற்றுபவர்கள் என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற கூட்டத்தொடர் திட்டமிட்டபடி நடத்தப் படுமா, அது திருத்தப்படுமா இல்லையா என்பது குறித்து இன்று இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

பாராளுமன்ற உறுப்பினர்கள் 3 பேர் கொவிட் 19 தொற் றாளர்களாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து சபா நாயகர் மற்றும் பாராளுமன்ற பொதுச் செயலாளரின் ஆலோசனைக்கு அமையக் கடந்த 13 ஆம் மற்றும் 15 ஆம் திகதிகளில் பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப் பட்டன.

அதன்படி 32 பாராளுமன்ற உறுப்பினர்கள், பாராளுமன்ற பணிக்குழாமினர் பாதுகாப்பு பிரிவு மற்றும் ஏனைய பணி யக உறுப்பினர்கள் அடங்கலாக 911பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.

அதில் எவரும் கொரோனா தொற்றாளர்களாக அடை யாளம் காணப்படவில்லை என பாராளுமன்ற தொடர் பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறான பின்னணியில் பாராளுமன்றத்தின் எந்த வொரு காரியாலயமும் தற்சமயம் மூடப்படவில்லை என அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது.

பல சந்தர்ப்பங்களில் பாராளுமன்ற கட்டடம் தொற்று நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகப் பாராளுமன்ற படைக்கள சேதவிர் நரேந்திர பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply