குஜராத் சூரத்தில் கோர விபத்து: தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது சரக்கு லாரி ஏறியதில் 15 பேர் பலி

குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் கிம் பகுதியில் இருந்து மான்ட்வி நோக்கி கண்டெய்னர் லாரி ஒன்று நள்ளிரவில் சென்று கொண்டிருந்தது. கோஸ்மா கிராமம் அருகே கண்டெய்னர் லாரி வந்து கொண்டிருந்தபோது எதிரே கரும்பு ஏற்றிக் கொண்டு வந்த டிராக்டர் மீது எதிர்பாராத விதமாக மோதியது.

இந்த மோதலுக்கு பிறகு கண்டெய்னர் லாரி தாறுமாறாக ஓடியது. டிரைவர் கட்டுப்பாட்டை இழந்ததால் லாரி தறிக்கெட்டு ஓடியது. இறுதியாக சாலையோரத்தின் நடைபாதையில் தூங்கி கொண்டு இருந்தவர்கள் மீது லரி ஏறியது. இதனால் அங்கு படுத்து தூங்கிக் கொண்டிருந்த தொழிலாளர்கள் அலறி துடித்தார்கள். கண்டெய்னர் லாரி ஏறி நசுக்கியதில் 23 தொழிலாளர்கள் படுகாயம் அடைந்தனர்.

இதில் 13 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்கள். 2 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தனர். படுகாயம் அடைந்த 8 பேருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பலியான 15 பேரும் புலம் பெயர் தொழிலாளர்கள். அவர்கள் அனைவரும் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் கட்டிட வேலை செய்பவர்கள். வேலை முடிந்து ரோட்டு ஓரத்தில் தூங்கியபோதுதான் நள்ளிரவில் இந்த பரிதாப சம்பவம் நடந்தது.

இந்த கோர சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது தொடர்பாக போலீ சார் வழக்குப்பதிவு செய்து கண்டெய்னர் லாரி டிரை வரை கைது செய்தனர். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply