ரஞ்சன் விடுதலையாவதற்கு ஒரேவழி ஜனாதிபதி பொது மன்னிப்பாகும் : டிலான் பெரேரா
நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு நான்கு ஆண்டுகள் கடூழியச் சிறைத் தண்டனை விதித்துள்ளது இதிலிருந்து விடு தலையாக ஒரே வழி ஜனாதிபதி மன்னிப்புதான் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஒரே மாற்றுவழி ஜனாதிபதி பொது மன்னிப்பாகும். அதனைப் பெற்றுக்கொள்ளவே எதிர்க்கட்சி முயற்சிக்கவேண்டும்.
ஆனால் ரஞ்சனிக்காகச் செயற்படுவதாகத் தெரிவித்துக் கொண்டு அடுத்த பாராளுமன்ற தேர்தலிலும் அவர் போட்டியிடுவதைத் தடுப்பதற்கே முயற்சிக்கின்றனர் என ஆளும் கட்சி உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
ரஞ்சனுக்கு வழங்கப்பட்டிருக்கும் நீதிமன்ற அவமதிப்பு குற்றத்துக்கான தீர்ப்பு, ஐக்கிய தேசிய கட்சி அரசாங்க காலத்தில் தொடுக்கப்பட்ட வழக்குத் தீர்ப்பாகும்.
தீர்ப்பு வழங்கிய நீதிபதிகள் தொடர்பில் ரஞ்சன் உட்பட எதிர்க்கட்சியினருக்கு நல்ல அபிப்ராயம் இருக்கின்றது.
அதனால் நீதிபதிகள் ஒருதலைபட்சமாகத் தீர்ப்பு வழங்கியதாகத் தெரிவிக்க முடியாது.
அத்துடன் ரஞ்சனிக்கு தற்போது உயர்நீதிமன்றமே தீர்ப் பளித்து சிறைத்தண்டனை வழங்கி இருக்கின்றது.
நாட்டின் சட்டத்தின் பிரகாரம் அவருக்கு விதிக்கப்பட்ட தண்டனை காலத்துக்குப் பின்னரே வெளியில் வரமுடியும்.
அவ்வாறு இல்லாவிட்டால் இருக்கும் ஒரே மாற்றுவழி ஜனா திபதி பொது மன்னிப்பைப் பெற்றுக்கொள்வதாகும்.
அதனால் ரஞ்சன் ராமநாயக்கவை பாராளுமன்றத்துக்கு அழைத்துவரவேண்டும் என தெரிவிக்கும் எதிர்க் கட்சி யினர், உண்மையாகவே அவருக்காகச் செயற்படுவதாக இருந்தால், அவருக்கு பொது மன்னிப்பைப் பெற்றுக் கொடுக்க முயற்சிக்கவேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply