அமெரிக்காவை உலகம் மீண்டும் மதிக்கிறது : அதிபர் டிரம்ப் பெருமிதம்

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பின் பதவிக்காலம் இன்றுடன் நிறைவடைகிறது. இதையடுத்து, அமெரிக்க மக்களிடம் அதிபர் டிரம்ப் வீடியோ மூலம் உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:

சீனா மீது வரலாறு காணாத வரி விதிப்புகளை மேற்கொண்டோம். சீனாவுடன் பெரிய ஒப்பந்தம் செய்து கொண்டோம். ஆனால், அதற்கான ஈரம் காய்வதற்குள் முழு உலகமும் சீன வைரசால் பாதிக்கப்பட்டது.

கொரோனா வைரஸ் எங்களை வேறு திசையில் செல்ல கட்டாயப்படுத்தியது. ஆனாலும் கொரோனா தொற்றுக்கு குறைவான காலத்தில் தடுப்பூசி கண்டுபிடிக்கப்பட்டது பெரு மகிழ்ச்சி அளிக்கிறது.

அரசியல் வன்முறையை ஒருபோதும் சகித்து கொள்ள முடியாது. வரும் காலத்தில் புதிதாக அமையவுள்ள ஆட்சிக்கு வாழ்த்துக்கள். அவர்களுக்கு அதிர்ஷ்டம் கிடைக்க வேண்டும் என வேண்டி கொள்கிறோம் என தெரிவித்தார்.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply