திடீர் உடல்நலக்குறைவு: பெங்களூரு மருத்துவமனையில் சசிகலா அனுமதி

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவருடைய நான்கு ஆண்டு சிறை தண்டனை வருகிற 27-ம் தேதி நிறைவுபெறுகிறது. 

பெங்களூரு சிறையில் இருந்து 27-ம் தேதியன்று சசிகலா விடுதலையாக இருக்கிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவருக்கு கடந்த இரண்டு நாட்களாக லேசான காய்ச்சல், இருமல் இருந்ததாக கூறப்படுகுிறது. இன்று காலை திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது. உடனடியாக சிறைச்சாலை வளாகத்திலுள்ள மருத்துவர்கள் சசிகலாவின் உடல்நிலையை பரிசோதனை செய்தனர்.

பின்னர் பெங்களூருவில் உள்ள பவுரிங் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். அங்கு அவரது உடல்நிலை குறித்து பரிசோதனை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில்,  பவுரிங் மருத்துவமனையில் சசிகலா சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.  மூன்று மருத்துவக்குழுக்கள் பரிசோதனை மேற்கொண்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சிறையில்  இருந்து ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனை அழைத்துச் செல்லப்பட்ட சசிகலா ஆம்புலன்சில் இருந்து இறங்கி நடந்து சென்றதாக கூறப்படுகிறது.

மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்தி


You can leave a response, or trackback from your own site.

Leave a Reply