வர்த்தகர் சங்கப் பிரதிநிதிகளுடன் அமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரன் சந்திப்பு
செங்கலடி – பதுளை வீதியில் பொதுமக்கள் போக்குவரத்து தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்குவது தொடர்பாக பாதுகாப்பு அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு தீர்வு காணப்படும் என தேசிய நல்லிணக்க அமைச்சரான விநாயகமூர்த்தி முரளிதரன் செங்கலடிப் பிரதேச வர்த்தகர்களிடம் உறுதியளித்துள்ளார். நேற்று மாலை செல்லம் திரையரங்கு மண்டபத்தில் வர்த்தகர் சங்கப் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே இந்த உறுதி மொழியை அவர் வழங்கியுள்ளார்.
கிழக்கு மாகாணம் விடுவிக்கப்பட்டு சிவில் நிர்வாகம் அமுலுக்குக் கொண்டுவரப்பட்டு இரண்டு வருடங்கள் கடந்த போதிலும் போக்குவரத்துக் கட்டுப்பாடுகள் காரணமாக மக்களின் இயல்பு நிலை தொடர்ந்தும் பாதிக்கப்படுவதாக வர்த்தகர் சங்கத் தலைவரான கே.மோகன் தனது தலைமையுரையின் போது அமைச்சரின் கவனத்திற்கு சுட்டிக்காட்டினார்.
செங்கலடி – பதுளை வீதி ஏ௫ நெடுஞ்சாலை ஊடாக காலை 6 மணிமுதல் மாலை 6 மணிவரையே பொதுமக்கள் போக்குவரத்திற்கு அனுமதியளிக்கப்படுவது,மட்டக்களப்பு – வாழைச்சேனை வீதியில் மயிலம்பாவெளி பொலிஸ் சோதனைச் சாவடி ஊடாக செல்லும் மோட்டார் சைக்கிள்களை உரிமையாளர்களே செலுத்திச் செல்லவேண்டுமென பொலிஸாரால் விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடு,ஏறாவூர் எல்லைப்புறத்திலுள்ள தமிழ் குடும்பங்கள் பாதுகாப்பைக் காரணங்கூறி இதுவரை மீளக் குடியமர்த்தப்படாமை,போன்ற விடயங்கள் தொடர்பாக அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் கவனத்திற்கு வர்த்தகர் சங்கப் பிரதிநிதிகள் விரிவாக எடுத்துக் கூறினர்.
செங்கலடி – பதுளைவீதியில் பொதுமக்கள் தொடர்பாக விதிக்கப்பட்டுள்ள நேரக் கட்டுப்பாடுகளை நீக்குதல் மற்றும் ஏறாவூர் எல்லைப் புறத்திலுள்ள தமிழ் குடும்பங்களின் மீள் குடியேற்றம் தொடர்பாக பாதுகாப்பு உயர் அதிகாரிகளிடம் பேசி தீர்வைப் பெற்றுத்தருவதாக அமைச்சரினால் உத்தரவாதம் அளிக்கப்பட்டது. மயிலம்பாவெளி பொலிஸ் சோதனைச் சாவடி ஊடாக மோட்டார் சைக்கிளில் பயணம் செய்வோர் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து இக்கூட்டத்திற்கு வருகைதந்திருந்த பொலிஸ் அதிகாரிகளின் கவனத்திற்கு அமைச்சரினால் கொண்டுவரப்பட்டு அந்தப் பிரச்சினைக்கு உடனடித் தீர்வு காணப்பட்டது.
மோட்டார் சைக்கிள் உரிமையாளர்தான் அதனைச் செலுத்திச்செல்லவேண்டும் என்ற கட்டுபாட்டை உடனடியாக நீக்குவதாக இக்கூட்டத்தில் கலந்து கொண்ட உதவி பொலிஸ் அத்தியகட்சகர் அத்துலத் முதலி அறிவித்தார்.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply