ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியை இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த அனுமதி
ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியை இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையத்தினால் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் பேராசிரியர் சன்ன ஜயசுமன்ன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா தொற்று உறுதியான நோயாளிகளுக்கு ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியை செலுத்துவது மிகச் சிறந்தது என அதிகாரிகள் முன்னர் தெரிவித்திருந்தனர்.
உலக சுகாதார அமைப்பின் ஒப்புதல் மற்றும் கொள்முதல் ஒப்பந்தங்களின் அடிப்படையிலேயே தடுப்பூசியை பயன்படுத்துவது குறித்த இறுதி முடிவு எட்டப்படும் எனவும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அசேல குணவர்தன தெரிவித்திருந்தார்.
இந்தநிலையிலேயே தற்போது ஒக்ஸ்போர்ட் அஸ்ட்ரா ஜெனெகா தடுப்பூசியை இலங்கையில் அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த தேசிய மருந்துகள் ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது.
மூலம்/ஆக்கம் : இணையத்தள செய்திYou can leave a response, or trackback from your own site.
Leave a Reply